'அந்த வீட்ல பண்டல் இருக்கு எடுத்துட்டு வாங்க'..ரூ.2000 நோட்டுகுறித்து நடிகர் எஸ்வி சேகர்..பிளாஸ்பேக்
சென்னை: 2016ம் ஆண்டு இறுதியில் 2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்ட போது நடிகர் எஸ்வி சேகர் பேசிய வீடியோவை இன்று பலரும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து மீம்ஸாக போட்டு வருகிறார்கள்.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சிகளில் தோன்றினார். அப்போது அவர் கூறுகையில், கருப்பு பணத்தை ஒழிக்க, புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.

2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வரப்போவது குறித்தும் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் ஆன போது, அந்த நோட்டு குறித்து பல வதந்திகள் பரவின.
அதில் நானோ சிப் இருப்பதாக பரவிய வதந்தி பெரிய அளவில் வைரலானது. என்ன ஏது என்று யோசிக்கமாலேயே பலரும் நானோ சிப் 2000 ரூபாய் நோட்டில் இருப்பதாக நம்ப தொடங்கினார்கள்.

நடிகர் எஸ்வி சேகர் அப்போது 2000 ரூபாய் நோட் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இனிமேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றினால் கூட, சேட்டிலைட் சிஸ்டத்தை வைத்து கண்காணிக்க கூடிய தொழில் நுட்பம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் பண்டலா எங்கயாவது இருந்தா, சேட்டிலைட்டை பார்த்து, பண்டலா அந்த வீட்டுல இருக்கு, எடுத்துட்டு வாங்கன்னு கவர்மெண்ட்ல சொல்லிடுவாங்க" என்று கூறினார். இந்த வீடியோவை இப்போது மீம்ஸ் போல் போட்டு பலரும் பரப்பி வருகிறார்கள்.
இதனிடையே எஸ்வி சேகர் சொன்னது போல் எந்த சிஸ்டமும் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி பின்னாளில் விளக்கம் அளித்தது. 2000 ரூபாய் நோட்டில் நானோ சிப் அல்லது மைக்ரோ சிப்இருப்பதாக சொல்லப்படுவது வதந்தி தான் என்று ரிசர்வ் வங்கி கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் விளக்கமும் அளித்தது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications