கொல்கத்தாவ கொள்ளுதாத்தானு படிச்ச நீயெல்லாம்.. இப்போ இங்கிலீஷ் பாட்டை ஸ்டோரில வைக்குற!
சென்னை : காதல், திருமணம் என்ற பேச்சு வந்தாலே, நம் மீமர்களுக்கு 90ஸ் கிட்ஸைக் கலாய்க்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே வந்து விடுகிறது. இப்போதும் அப்படித்தான் விதவிதமான 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
என்னதான் 90ஸ் கிட்ஸ்கள் இப்போதிருப்பவர்களைவிட புத்திசாலிகளாக வலம் வந்தவர்கள், வருபவர்கள் என்றாலும், சில விசயங்களில் 90ஸ் கிட்ஸ்களிடம் பல்பு வாங்க வேண்டியதாகி விடுகிறது. அதில் முக்கியமானது இந்தக் காதல், திருமணம் போன்றவை. அதனாலேயே 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்க வேண்டும் என்றால் அதைத்தான் கையில் எடுத்து விடுகிறார்கள் இந்த குறும்புக்கார மீமர்கள்.
இப்போதும் அப்படித்தான், 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தை மட்டும் வைத்து கலாய்க்காமல், அவர்களது அப்பாவித்தனத்தையும் சேர்த்து வைத்து கலாய்த்து வருகின்றனர். "கொல்கத்தாவ கொள்ளுதாத்தானு படிச்ச நீயெல்லாம்.. இப்போ இங்கிலீஷ் பாட்டை ஸ்டேட்டஸ்ல, ஸ்டோரில வைக்குற!" என்பது மாதிரியான மீம்ஸ்களை அதிகம் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications