சென்னைவாசிகள் இப்போது.. ஏன் தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறீங்க.. ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளயேவா?
சென்னை: வடகிழக்கு பருவ மழை வழக்கம் போல் வேலையை காட்டி வருகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் ஏன் தெளியவச்சு தெளியவச்ச அடிக்கிறீங்க என்று வடகிழக்கு பருவ மழையை பார்த்து மக்கள் கேட்பது போல் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையில் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாக மழை பெய்து வருகிறது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மறுபக்கம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருக்கிறது. இந்த இரு காரணங்களால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த 2 தினங்களாக பரவலாகவே மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், அடிக்கடி மேகக்கூட்டங்கள் ஒரு சேர வந்து குவிந்து மழை கொட்டியது. கொஞ்சம் தெளிவாக சொல்வது என்றால் தெளிய வைத்து தெளிய வைத்து மக்களை அடித்து வருகிறது. அவ்வை சண்முகி படத்தில் டெல்லி கணேஷை அடிப்பது போல் மழை சென்னை மக்களை அடித்து வருகிறது. இப்போது வரை இதுதான் நிலை.
சென்னையில் நேற்று கொரட்டூர், பாடி, அம்பத்தூர், முகப்பேர் போன்ற பகுதிகளில் மிக மோசமான மழை பெய்தது. பாதிப்பும் அதிகமாக இருந்தது. இதேபோல் ஒரே நாளில் அண்ணா நகர், திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை வடசென்னை பகுதிகளில் மிக அதிகமான கனமழை பெய்தது. அதேநேரம் எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராயநகர், போன்ற பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது..
காலையில் இருந்து மாலை வரை பெய்த மழை காரணமாக அம்பத்தூர், பாடி, ராயபுரம், அமைந்தகரை, ஆதம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. குரோம்பேட்டை பகுதியில் ஜிஎஎஸ்டி சாலையில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதுத. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பும் தண்ணீர் தேங்கியது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நேற்று இரவு கனமழை காரணமாக முற்றிலும் முடங்கியது. ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, ஓஎம்ஆர் சாலைகளில் பயணித்தவர்கள் மிகவும் நொந்து போனார்கள். ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், ரேடியல் சாலை பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளநீர் உடனே வெளியேற முடியாத காரணத்தால் வாகனங்கள் கடும் நெரிசலை சந்தித்தன.
All about today 😛! Clouds slowly clearing off now.
— Chennai Weatherman (@chennaisweather) November 29, 2023
More rains are possible tonight depending on further development. #ChennaiRains #NEM2023 #Monsoon pic.twitter.com/tBVRGLRTwO
அதேநேரம் சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களில் மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தாம்பரம் பகுதியிலும் மழை நீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் இந்த முறை வழக்கத்தைவிட வேகமாகவே இருந்தது. சாலைகள் மோசமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலையும், பள்ளத்தில் விழுந்து காயம் அடையும் நிலையும் பல இடங்களில் ஏற்பட்டது. இப்படியான நிலையில், நேற்று இரவு சில மணி நேரத்தில் பெய்த கனமழை, சில சுரங்கப்பாதைகளை மூழ்கடித்தது.
இரவு 7 மணி அளவில் பெய்த மழை, மக்களை மொத்தமாக முடக்கவும் செய்தது. அதேநேரம் மழை நீரை வெளியேற்றும் பணியினை இரவு பகலாக மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறது. இன்று மழை நின்றால் இயல்பு நிலை திரும்பலாம் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், மழை விட்டு விட்டு இன்றும் பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் என்னடா இது. ஏன் தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறீங்க என்று வடகிழக்கு பருவ மழையை பார்த்து கேட்கும் நிலை உள்ளது. இது தொடர்பான மீம்ஸ் வீடியோக்களும் வெளியாகி உள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications