பச்ச குழந்தை மாதிரி துள்ளி குதித்த சிஎஸ்கே பாட்டி.. மரண பயத்தை காட்டிய மொகித் சர்மா.. ஐபிஎல் மீம்ஸ்
சென்னை: நேற்று இரவு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தான் வெற்றி பெறும் என்று ஆரம்பத்தில் இருந்தது. அதாவது 70 சதவிதம் அளவிற்கு சென்னைக்கே வாய்ப்பு இருந்தது. ஆனால் குஜராத் அணியின் மொகித் சர்மா அடுத்தடுத்த ஓவர்களை அபாரமாக வீசி சென்னை அணி ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தினார். ராயுடு, தோனியை ஒரே ஓவரில் அவுட் ஆக்கினார். ரன் விட்டுக்கொடுப்பதிலும் கஞ்சத்தனமே காட்டினார்-
உண்மையை சொல்வதென்றால் சாவு பயத்தையே மொகித்சர்மா காட்டிவிட்டார். கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளை அடிக்க முடியாத அளவிற்கு ஸ்லோ பால்களாகவும், யார்க்கர்களாகவும் வீசினார். முதல் நான்கு பாலுமே யார்க்கர் என்பதால் அடிக்க முடியாமல் திணறினார்கள் துபேவும், ஜடேஜாவும்.. இதனால் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. ஐந்தாவது பந்தில் பவுண்டரி போனால் கூட சென்னை அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் மொகித் சர்மா வீசிய யார்க்கர் ஜஸ்ட் மிஸ்ஸானது. இதை சரியாக பயன்படுத்திய ஜடேஜா சிக்சரை பறக்கவிட்டார். இதனால் கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இரு அணி வீரர்களுக்கும், இரு அணி ரசிகர்களுக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கண்ணீருடன் பிரார்த்தனை எல்லாம் ரசிகர்கள் செய்தார்கள். மொகித் சர்மா பந்தை லெக்கில் போட அதை அப்படியே பின்னாடி அடித்துவிட்டார் ஜடேஜா, இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
உண்மையில் குஜராத் அணியும் மிகச்சிறப்பாக விளையாடியது. ஹர்த்திக் பாண்டே சொன்னது போல் சென்னை அணிக்கான நாளாக நேற்று இருந்தது. அதனால் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சென்னை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் வீடியோக்கள், தோனியின் ஒவ்வொரு அசைவும் மீம்ஸ் வீடியோக்களாக பரவி வருகின்றன.
ஒரு பாட்டி சென்னை அணி வெற்றி பெற்ற போது மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மொகித் சர்மாவின் ஆட்டத்தையும் சென்னை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அந்த மீம்ஸ் வீடியோக்களை பார்ப்போம்.



















Click it and Unblock the Notifications