For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆயுதபூஜைக்கு வண்டியை கழுவுவனு பார்த்தா.. நீ மழை எப்ப வரும்னு வானத்தையா பார்த்துட்டு இருக்க!

ஆயுதபூஜையை ஒட்டி வாகனங்களை கழுவி பூஜை செய்பவர்களை வைத்து விதவிதமான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: ஊரிலுள்ள தூசியை எல்லாம் தன் மேல் சுமந்து கொண்டு திரியும் வாகனங்களை, இன்று அழகாகக் கழுவி அதன் உரிமையாளர்கள் பூஜை போடும் மொமண்டைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் குறும்புக்கார மீமர்கள்.

ஒரு சிலர் தங்களது குடும்பத்தில் ஒருவராக பாவித்து வாகனங்களைப் பராமரிப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்றவர்கள் எல்லாம் மழை வந்து கழுவும்போது பார்த்துக் கொள்ளலாம் என அழுக்குப் படிந்த வாகனங்களை அப்படியே ஓட்டி மகிழ்வார்கள்.

படிப்பு நல்லா வரணுமா பட்டு குட்டீஸ்.. சரஸ்வதி பூஜை நாளில் மறக்காமல் இப்படி வணங்குங்கள்! படிப்பு நல்லா வரணுமா பட்டு குட்டீஸ்.. சரஸ்வதி பூஜை நாளில் மறக்காமல் இப்படி வணங்குங்கள்!

இவர்கள் காட்டில் மழை என்பதுபோல், இன்று காலையே சென்னையில் மழை வந்து விட்டது. ஏற்கனவே வீட்டில் சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து, களைத்துப் போனவர்கள், நைஸாக இந்த மழையில் கொண்டுபோய், வாகனங்களை வைத்து, ஓசியிலேயே வண்டியை கழுவி விட்டார்கள். வழக்கம்போல், இவர்களையும் மீமர்கள் விட்டு வைக்கவில்லை.

மற்ற நாட்களில் இருக்கும் வண்டியின் நிலைமையையும், இன்று அழகாக குளித்து, பூச்சூடி, மேக்கப்போடு இருக்கும் வண்டிகளையும் ஒப்பிட்டு விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...

Funny memes collection on ayudha pooja celebrations
Funny memes collection on ayudha pooja celebrations
Funny memes collection on ayudha pooja celebrations
Funny memes collection on ayudha pooja celebrations
Funny memes collection on ayudha pooja celebrations
Funny memes collection on ayudha pooja celebrations
English summary
These are some jolly memes collection on ayudha pooja celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X