“பாசக்கார பயலுக விட்டுட்டு ஜெயிக்க மாட்டேங்குறாங்களே”.. சிஎஸ்கே, எம்ஐ-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்கள்!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் எம் ஐ அணிகள் தோல்வியடைந்தது பற்றிய மீம்ஸ்கள்.
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக தோல்வியைத் தழுவியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை பங்கமாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

அதென்னவோ மற்ற விளையாட்டுகளுக்கு தரப்படுவதைவிட கிரிக்கெட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறார்கள் ரசிகர்கள். உலகக்கோப்பை, ஐபிஎல் என ஒவ்வொரு போட்டியையும் திருவிழாவாகத்தான் கொண்டாடுகின்றனர். தங்களது அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவது போல, தோல்வியடைந்தால் சோகமடைந்து விடுகின்றனர்.

ஆனால் சந்தோசமாகட்டும் இல்லை வருத்தமாகட்டும் சமீபகாலமாக அதனை மீம்ஸ் போட்டுத்தான் வெளிப்படுத்துகின்றனர். அதிலும் சொல்லி வைத்தார்போல், சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அடுத்தடுத்து ஒரே மாதிரி தோல்வியைத் தழுவி வருவதை வைத்து, மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

'குருநாதா உங்களையும் முடிச்சுட்டாங்களா'..., 'பாசக்கார பயலுக விட்டுட்டு ஜெயிக்க மாட்டேங்குறாங்களே..' என ஒவ்வொரு மீம்ஸ்களும் இரண்டு அணியையும் பங்கம் செய்கின்றன.

இதோ சில ஜாலியான மீம்ஸ்கள் உங்களுக்காக..












Click it and Unblock the Notifications