ரொம்பதூரம் போய்ட்டியா ராம்.. இன்னும் பெருங்களத்தூரே தாண்டலை ஜானு.. இது வேறலெவல் கலாய்
தீபாவளி டிராபிக்கை வைத்து பெருங்களத்தூர் மீம்ஸ்கள் பல இணையத்தில் கலகலக்க வைக்கின்றன.
சென்னை: இணையத்தில் எது, எப்போது, எப்படி டிரெண்ட்டிங் ஆகுமென்றே கணிக்க முடியாது. அந்தவகையில் தற்போது தீபாவளிக்காக சென்னையில் இருப்பவர்கள் சொந்த ஊர் கிளம்பிக் கொண்டிருக்க, மீம்ஸ்களின் கண்டெண்ட்டாகி இருக்கிறது பெருங்களத்தூர்.

மற்ற நகரங்களைவிட சென்னையில் எப்போதுமே டிராபிக் அதிகமாகத்தான் இருக்கும். தலைநகர் என்றால் சும்மாவா? எப்போதுமே சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் பண்டிகை காலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

பெரும்பாலும் சென்னையில் இருப்பவர்கள் வெளியூர்க்காரர்கள் என்பதால், பண்டிகை, விடுமுறை என வந்து விட்டால், உடனே ஊருக்கு கிளம்பி விடுவார்கள். இதனால் ஊரே காலியான மாதிரி, சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால், அப்படி வெறிச்சோடுவதற்கு முன்பு, விடுமுறை துவங்குவதற்கு முந்தைய நாள் மாலையில் இருந்தே, சாலைகளில் கூடுதல் வாகனங்கள் குவியத் தொடங்கி விடும்.

போக்குவரத்து காவலர்களும் எவ்வளவுதான் திட்டம் போட்டு, 'தாம்பரம் பக்கம் வராதீங்க'... என இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாராவில் வரும் ஜன்னல் அக்கா மாதிரி, எச்சரிக்கை விடுத்தாலும், மக்கள் கேட்க மாட்டார்கள். பெருங்களத்தூரைத் தாண்டுவதற்குள்ளாகவே விடுமுறை கழிந்து விடுமோ எனப் பயப்படும் அளவிற்கு டிராபிக் இருக்கும்.

தீபாவளி விடுமுறை இன்றிலிருந்து தொடங்கியதால், நேற்று மாலையே பெருங்களத்தூர் சாலைகள் பிஸியாகி விட்டன. டிராபிக்கில் கடுப்போடு காத்துக் கொண்டிருப்பவர்களைக் கலகலக்க வைக்கும் வகையில், மீமர்களும் பெருங்களத்தூர் டிராபிக்கைக் கலாய்த்து மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications