ரொம்ப அக்கறையா என் நம்பரை வாங்கி ரிசல்ட் பார்த்து.. வீட்ல போட்டு தர்றீங்களே.. யாரு சாமி நீங்களாம்?
பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மதிப்பெண்களைக் கேட்கும் உறவினர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மறக்காமல் போன் போட்டாவது மதிப்பெண்களைக் கேட்கும் உறவினர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Recommended Video
தேர்வு முடிவுகள் என அறிவிப்பு வந்து விட்டாலே, தங்கள் சொந்தபந்தங்களில், அக்கம்பக்கத்தில் யார்யாரெல்லாம் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர் என கணக்கெடுக்க ஆரம்பித்து விடுவார்கள் சிலர். மற்ற நாட்களில் இப்படி ஒரு உறவு இருக்கிறதா என்பதை நினைத்துக்கூட பார்க்காதவர்கள், மறக்காமல் தேர்வு முடிவுகள் அன்று போன் செய்து பிள்ளைகளின் மதிப்பெண்களைக் கேட்க மறக்க மாட்டார்கள்.
அவர்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொண்டு, இவர்கள் எதுவும் செய்துவிடப் போவதில்லை என்றாலும்கூட, அதில் அப்படி என்ன ஒரு ஆர்வமோ, ஆனந்தமோ தெரியவில்லை. ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், முந்தைய நாளே சம்பந்தப்பட்ட மாணவரின் ரோல் எண்ணை வாங்கி, அந்த மாணவரைவிட ஆர்வமாக அவர்களே தேர்வு முடிவுகளைப் பார்த்து விடுவார்கள்.
பார்ப்பதோடு விடாமல், மதிப்பெண்கள் குறைந்து விட்டால், சமயங்களில் பெற்றோர்களே சும்மா இருந்தாலும், இவர்கள் விட மாட்டார்கள். 'நான்லாம் அப்பவே அப்டி படிச்சேன்.. மார்க் வாங்கினேன்.. நீ போனை பார்த்து பார்த்து இப்டி மார்க்கை கோட்டை விட்டுட்டே..' என தங்களால் முடிந்த அளவுக்கு பற்ற வைத்து விடுவார்கள்.
இப்படிப் பொறுப்பானவர்களை மீம்ஸ் போட்டு கௌரவப் படுத்தாமல் விட்டால் சரியாக இருக்குமா என்ன? அதனால்தான் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், இப்படி மார்க் கேட்கும் உறவினர்களையும் மறக்காமல் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அவற்றில் சில உங்களுக்காக...






-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications