ஏன்டா உனக்கு யாரும் பிரியாணி அனுப்பலையா.. எதே ஆமா அனுப்பல.. அதுக்கு என்ன இப்போ!
சென்னை : பிரியாணி என்றால் சும்மாவே மீம்ஸ் போட்டு அதகளப் படுத்துவார்கள் நம் நெட்டிசன்கள். இதில் அவர்களுக்குப் பிடித்த பிரியாணிக்கு பேர் போன ரம்ஜான் பண்டிகை என்றால் சும்மா இருப்பார்களா... மீம்ஸ்களில் பிரியாணியை கான்செப்ட்டாக்கி, இணையத்தையே கமகமக்க வைத்து விட்டனர்.
ரம்ஜான் என்றாலே நம் மக்கள் குஷியாகி விடுவார்கள். மற்ற பண்டிகைகளுக்குக்கூட வாழ்த்து கூறாதவர்கள், அன்றைய தினம் தங்களது போனில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் மறக்காமல் வாழ்த்துகளைப் பகிர்ந்து விடுவார்கள். அதற்குக் காரணம் வெறும் பாசம் மட்டுமல்ல.. பிரியாணியும்தான்.

ஒரு சிலர் எல்லாம் அவர்கள் நோன்பு ஆரம்பிக்கும் நாட்களில் இருந்தே மறக்காமல் குட்மார்னிங், குட்நைட் அனுப்பி, 'இங்க ஒருத்தன் உன் பிரியாணிக்காக காத்திட்டு இருக்கேன்பா.. மறக்காம குடுத்து விட்டுடு' என ஞாபகப் படுத்த ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் ரம்ஜான் வரை எல்லாம் காத்திருக்காமல், நோன்பு கஞ்சியாவது கிடைத்தால் போதும் என தினமும் வாங்கி குடித்து விடுவார்கள்.
இப்படி ரம்ஜான் பண்டிகையைப் பிடிக்காத பிரியாணி பிரியர்களே இருக்கமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு எதிர்பார்த்த பலருக்கு பிரியாணி கிடைக்கவில்லை போலும், அதனால்தான், பிரியாணி கிடைக்காத தங்களது சோகத்தை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். "ஏன்டா உனக்கு யாரும் பிரியாணி அனுப்பலையா.. எதே ஆமா அனுப்பல.. அதுக்கு என்ன இப்போ!" என்றும், "அன்பு நண்பர்களே.. பிரியாணியை ஸ்விக்கி, சொமேட்டோனு எதுல ஆர்டர் போட்டு தந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்!" என்றும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட பிரியாணி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications