இன்னைக்குதான் கறி சாப்பிடலை.. ஆனா எனக்கென்னமோ வருசக்கணக்கா சாப்பிடாத மாதிரி இருக்கு!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இறைச்சி வாங்க முடியாமல் அசைவப் பிரியர்கள் அவதிப்படுவதை வைத்து ஜாலியாக பல மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையோடு, காணும் பொங்கலும் சேர்ந்துவிட, 'இந்நேரம் நான் எங்க எப்டி இருக்க வேண்டிய ஆளு..' என்ற ரேஞ்சுக்கு கொண்டாட்ட விரும்பிகள் புலம்பி வருகின்றனர்.

சரி, வெளியில்தான் எங்கும் போக முடியவில்லை, வீட்டிலாவது அசைவம் சமைக்கலாம் என்றால், அதற்கும் இன்று வாய்ப்பில்லாமல் போய் விட்டது..முன்னெச்சரிக்கையாக நேற்றே கறி வாங்கி பிரிட்ஜில் வைத்து விட்டவர்கள் தப்பித்து விட்டார்கள். மற்றவர்கள் பாவம், பக்கத்து வீட்டில் வரும் கறிக்குழம்பு வாசனையைப் பிடித்து ஏக்கப்பட்டுக் கொண்டு உள்ளனர்.

கறிக்குழம்பு தான் சாப்பிட முடியவில்லை, மீம்ஸாவது போடுவோமே என இதை வைத்து இணையத்தில் மீம்ஸ்கள் பகிர்ந்து வருகின்றனர். இதோ அவற்றில் சில உங்களுக்காக...












Click it and Unblock the Notifications