சுப்மன் கில் சதம் அடிக்கும்போதே தெரிய வேண்டாமா.. தனுஷாக மாறிய பென் ஸ்டோக்ஸ்.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை பெற்றிருக்கிறது. ஒரே போட்டியில் இந்திய அணி 5 சதங்களை விளாசிய போதும் தோல்வியடைந்துள்ள நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஜாலியான மீம்ஸை பார்க்கலாம்.
சண்டக்கோழி படத்தில், ஒரு பையன் கை வச்சிட்டு போய்ட்டான் என்று கூற, அதற்கு எதிரில் இருந்து, ஏன் அண்ணே.. அண்ணே ஊர்ல இல்லையா? என்று கேட்பார். அதற்கு அவர், "கை வச்சதே அண்ணன் மேலதான்யா" என்று சொல்வார். அதனை அப்படியே மாற்றி, ஒருத்தன் கை வச்சிட்டான் என்று சொல்ல, அதற்கு, ஏன் அண்ணே.. பும்ரா அண்ணன் மேட்ச்ல இல்லையா என்று கேட்க, அதற்கு, "பும்ராவை விக்கெட் வீழ்த்தவிடாமல் தான் சேஸிங் பண்ணி வென்றுள்ளார்கள்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

கலகலப்பு படத்தில் விமல் சிவாவிடம், "இந்த ஹோட்டலில் உனக்கும் பங்கு இருக்கு.. ஆனால் உனக்கும் சேர்த்து நான் உழைச்சிட்டு இருக்கேன்" என்று சொல்வார். அதனை அப்படியே மாற்றி விமலாக பும்ராவையும், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவாக சிவாவையும் மாற்றி, உங்க எகானமிக்காகவும் சேர்த்து நான் பவுலிங் போட்டுட்டு இருக்கேன் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா கொய்யால ரகம்.

பரிதாபங்கள் வீடியோ பைக் டூர் செல்லும் சுதாகர், "பார்த்தீங்களா ஃபிரண்ட்ஸ்.. ஸ்கூல் பசங்களா போறாங்க.. நம்ம பைக் பெர்ஃபாமன்ஸை பார்க்கட்டும்" என்பார். கடைசி 9 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருப்பதை வைத்து, சுதாகரை இந்திய அணி ரசிகராக மாற்றி, பார்த்தீங்களா ஃபிரண்ட்ஸ்.. கம்பீர் பயிற்சியாளரா வந்த பின் இந்தியாவோர் பெர்ஃபாமன்ஸை என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் பிரகாஷ் ராஜிடம் தனுஷ், ""யாருமே வராத அப்பவோ யோசிச்சிருக்கணும்.. ஏரியா ரொம்ப வீக்குனு.. வரட்டா செல்லம்" என்று சொல்வார். அதில் வரும் தனுஷாக இங்கிலாந்து அணியையும், பிரகாஷ் ராஜாக இந்திய அணியையும் மாற்றி, "சுப்மன் கில், கேஎல் ராகுல் சதம் அடிக்கும் போதே யோசிச்சிருக்கணும்.. பிட்ச் ரொம்ப வீக்குனு.. வரட்டா செல்லம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஊரத் தெரிஞ்சுகிட்டேன்.. உலகம் புரிஞ்சிக்கிட்டேன் தங்கமே ரகம்.

-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications