"யாருப்பா நீ.." ஐபிஎல் பைனலில் பவுலிங்கில் அரைசதம் போட்ட தேஷ்பாண்டே! வைத்து செய்யும் நெட்டிசன்கள்
டெல்லி: இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பவுலிங்கில் ரன்களை வாரி வழங்கிய தேஷ்பாண்டே நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
இன்றைய தினம் ஐபிஎல் இறுதிப் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று நடக்க இருந்த இந்தப் போட்டி மழை காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் கில்லும், சஹாவும் தொடக்க வீரர்களாக இறங்கினர்.
இதில் ஆரம்பமே சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கத்திலேயே கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சஹார் தவறவிட்டார். அதன் பின்னரும் தனது பவுலிங்கிலேயே மற்றொரு கேட்ச்டையும் கூட சஹார் தவறவிட்டார். இது மட்டுமின்றி தொடர்ச்சியாகப் பல சொதப்பலான பீல்டிங்கையே சிஎஸ்கே அணியிடம் இருந்து பார்க்க முடிந்தது. இதனால் குஜராத் அணி மளமளவென ரன்களை குவித்தது.
குறிப்பாகத் தமிழக வீரரான சாய் சுதர்சன் சிஎஸ்கேவுக்கு இன்று வில்லனாக மாறிவிட்டார். ஒன் டவுன் போசிஷனில் இறங்கிய சாய் சுதர்சன் சிஎஸ்கே பவுலர்களை தெறிக்கவிட்டார். 47 பந்துகளில் அவர் 8 பவுன்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்களை விளாசினார். இறுதிப் போட்டியில் அவரது ஸ்டைரக் ரேட் 204ஆக இருந்தது. இன்றைய தினம் பலரும் சாய் சுதர்சன் குறித்தே பேசி வருகின்றனர்.

அதேநேரம் மற்றொரு சிஎஸ்கே வீரரும் ரன்களுக்காக இன்று நெட்டிசன்களிடம் வசமாகச் சிக்கிக் கொண்டார். அதுதான் துஷார் தேஷ்பாண்டே.. ஆனால், அவர் பேட்டிங்கில் ரன் எடுக்கவில்லை.. மாறாக பவுலிங்கில் ரன்களை வாரி வழங்கிவிட்டார். இறுதிப் போட்டியில் மட்டும் 4 ஓவர்களில் தேஷ்பாண்டே, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அவர் 56 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.

துஷார் தேஷ்பாண்டே இந்தாண்டு மட்டும் 16 போட்டிகளில் விளையாடி 564 ரன்களை வாரிக் கொடுத்துள்ளார். ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதிக ரன்கள் குழித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட்டும் அதே 564 ரன்களை தான் எடுத்திருந்தார். இப்போது அவரை தான் நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர். இதை ஒப்பிட்டே ஒருவர் நக்கல் செய்துள்ளார்.

இன்னும் சிலர் கடந்த ஆண்டுகளில் கிரிஸ் ஜோர்டான் சிஎஸ்கே அணிக்கு எப்படி ரன்களை வாரி வழங்கினோரோ அதுபோன்ற ஒருவர் தான் தேஷ்பாண்டே என பதிவிட்டு வருகின்றனர். இருவருக்கும் சொந்த அணியையே அழிக்கும் ஆற்றல் இருக்கிறதாம்.

அதேபோல மற்றொரு நெட்டிசன் கில்லும் தேஷ்பாண்டேவும் மாறி மாறி ரன்களை குவித்து வருவதாக நக்கலடித்துள்ளார்.

மற்றொருவர் சிஎஸ்கே டிரஸிங் ரூமில் என்ன நடக்கும் என்பதை விளக்கும் வகையிலான படத்தைப் பகிர்ந்துள்ளார். அதாவது தான் இன்று நன்கு பவுலிங் போட்டனா என்று தேஷ்பாண்டே கேட்டால் அதற்கு தோனியின் பதில் இப்படித்தான் இருக்கும் என நக்கலடித்துள்ளார்.

பவுலிங்கில் அரைசதம் அடித்துவிட்டதாக தேஷ்பாண்டேவை பலரும் பாராட்டவும் தவறவில்லை.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications