அடிக்கவும் ஆள் இல்ல.. பிடிக்கவும் ஆள் இல்ல.. இதுல கப்பு மட்டும் கன்பார்ம்மா வேணுமாம்!
சென்னை : சிஎஸ்கேவைக் கலாய்த்தது போதாதென்று இப்போது அந்த அணியின் சியர்ஸ் கேர்ள்ஸ் வரை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மிக மோசமாக விளையாடி வருகிறது. போட்டிகளில் தோற்பது மட்டும் அல்லாமல் ரன் அடிக்கக் கூட முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் அதன் சியர்ஸ் கேர்ல்ஸ்கள் கூட உற்சாகமின்றி செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள், சியர்ஸ் கேர்ல்ஸ்களையும் சேர்த்து கலாய்த்து வருகின்றனர். சியர்ஸ் பெண்களுக்கு கூட வேலையில்லாமல் செய்துவிட்டீர்களே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரே என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூக வலைதளங்களில் பலரும்.
அதோடு, இப்பவும் கப் கிடைக்கும் என கனவில் இருக்கும் ரசிகர்களையும், "அடிக்கவும் ஆள் இல்ல.. பிடிக்கவும் ஆள் இல்ல.. இதுல கப்பு மட்டும் கன்பார்ம்மா வேணுமாம்!" எனக் கலாய்த்து வருகின்றனர்.
அப்படியான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications