மார்க் எவ்ளோனு கேட்கிறவன்.. ரத்தம் கக்கி சாவான்னு ஸ்டேட்டஸ் வச்சிட வேண்டியதுதான்!
சென்னை: பொதுத்தேர்வு முடிவுகள் வந்து விட்டாலே, நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டு மாணவர்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தானாகவே நமக்கு வந்து விடும். அப்படி, 'எவ்ளோ மார்க்.. எவ்ளோ மார்க்?' எனக் கேட்டு நச்சரிப்பவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாதது குழந்தைப் பருவம்தான். அதிலும் குறிப்பாக மாணவர் பருவம் எப்போதும் நினைத்து நினைத்துப் பார்த்து மகிழக்கூடியது. அப்படிப்பட்ட மாணவப் பருவத்தில் குழந்தைகளுக்கு பிடிக்காத விசயம் என்றால் தேர்வும், அதில் பெறும் மதிப்பெண்களும்தான். அதனாலேயே அதைப் பற்றி பேசுபவர்களை ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள்.

ஆனாலும் பெரியவர்கள் விடமாட்டார்கள்.. ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதம் வந்து விட்டால் கண்ணில் படும் மாணவ, மாணவிகளிடம் எல்லாம், 'எப்படி எக்ஸாம் எழுதினாய்? எவ்வளவு மார்க்? அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆகிட்டியா?' எனக் கேள்விக்கணைகளைத் துளைத்து எடுத்து விடுவார்கள். சாதாரணமாகவே அப்படியென்றால் பொதுத்தேர்வு முடிவுகள் என்றால் கேட்கவா வேண்டும்?
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்றால், உடனே தனக்கு தெரிந்த வட்டாரத்தில் யார் யார் வீட்டில் எல்லாம் மாணவர்கள் அத்தேர்வை எழுதியிருக்கின்றனர் என நோட்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு, தேர்வு முடிவுகளை விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி அவர்கள் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு என்ன ஆனந்தமோ தெரியவில்லை என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தேர்வு முடிவுகள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications