அஜீத்தா.. பாஜகவா.. யாரு சாணக்கியன்.. இதுதான்.. டாக் ஆப் தி டிவிட்டர்! #MaharashtraPoliticalDrama
மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் விவாதமாகி வருகிறது
Recommended Video
மும்பை: நேராக பாஜக கூட்டணிக்குப் போனார்.. துணை முதல்வரானார்.. தன் மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெற வைத்தார்.. பதவியை ராஜினாமா செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.. அஜீத் பவார்தான் உண்மையான சாணக்கியன் என்று மகாராஷ்டிராவில் கலகலப்பாக விவாதம் ஒன்று கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நாடகம்தான் சமீப காலத்தில் நாட்டில் நடந்த மிகப் பெரிய அரசியல் டிராமா. ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பம்.. அதிரடி பரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைசியில் வேறு வழியே இல்லாமல் முதல்வர் பதவியிலிருந்து விலகி விட்டார் பட்னவீஸ். அவருக்கு முன்பாக அஜீத் பவார் பதவி விலகி விட்டார்.
இப்ப இந்தக் கதையில் அஜீத் பவார்தான் ஹீரோ. அவரை வைத்துத்தான் இப்போது சமூக வலைதளங்களில் ஓட்டிக் கொண்டுள்ளனர். பலர் அவரைப் பாராட்ட வேறு செய்கிறார்கள். அதிலிருந்து சில உங்களுக்காக.
|
சேர்ந்தார்- வாபஸ் - விலகினார்
இது ஒரு டிவீட். இதில் என்ன சொல்லிருக்காங்கன்னா.. முதல் நாள்- அஜீத் பவார் பாஜகவுடன் இணைந்து துணை முதல்வரானார். 2ம் நாள் - அஜீத் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கை பாஜக கைவிட்டது. 3வது நாள் - துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார். யார் உண்மையான சாணக்கியன்?
|
இதைப் பாருங்கய்யா
இதைப் பாருங்க. மகாராஷ்டிரா அரசியல் நாடகத்தின் இன்றைய நிலை இதுதான் என்று இவர் ஒரு வீடியோ போட்டுள்ளார்.
|
ஒரிஜினல் சாணக்கியர்
இவர் சரத் பவாரை பெருமிதத்துடன் உண்மையான சாணக்கியரே இவர்தான். இதை எனது குழந்தைகளிடம் பெருமையுடன் சொல்வேன் என்று கூறியுள்ளார்.
|
இவர்தான் சூப்பர் ஸ்பின்னர்
இவர் கிரிக்கெட் ரசிகர் போல. இவர்தான் உலகத்திலேயே சூப்பர் ஸ்பின்னர் என்று சரத் பவாரை லெஜன்டுகளுடன் இணைத்து டிவீட் போட்டுள்ளார்.
எப்படியோ மகாராஷ்டிர குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மண்டை காய்ந்து போச்சுப்பா!












Click it and Unblock the Notifications