"கார்ல் மார்க்ஸ் தெரியுமா.. போற வழில படிக்கிறேணே.. நீ வாணே" தவெகவை அலறவிடும் மீம்ஸ்!
சென்னை: தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் சூழலில், இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடி தவெக நிர்வாகிகள் நடக்க தொடங்கி இருக்கின்றனர். இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
தேர்தலுக்கு முன் விஜய்யின் பிரச்சாரத்தில் பங்கேற்ற சிறுமி, "விஜய் படமே டீவில போட மாட்றாங்க.. விஜய் படம் போட்டா தான் என்ன" என்று கண்ணீருடன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. தற்போது அந்த சிறுமியாக தவெகவினரை மாற்றி, அண்ணன முதல்வர் ஆகவே விட மாட்டங்கிறாங்க.. திமுக ஒரு 10 எம்எல்ஏ கொடுத்தா தான் என்னவாம் என்று அழுது கொண்டே கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இதெல்லாம் ரொம்ப தவறு தம்பிகளா ரகம்.

தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி சிபிஎம் சண்முகத்திடம் அடக்கமாக பேசும் புகைப்படம் வெளியாகியது. அந்த புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் வேறு லெவல். அதில் பெ சண்முகம், "கார்ல் மார்க்ஸ் படிச்சிருக்கியா? என்று கேட்பதாகவும், அதற்கு சிடிஆர் நிர்மல் குமார், போற வழியில் படிச்சிக்கிறேன்ணே.. இப்ப நீ வாணே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செத்தான் சிவனாண்டி ரகம்.

திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை வைத்து விஜய், "இப்படித்தான் பூவே உனக்காக படத்துல ரெண்டு குடும்பமும் சண்ட போட்டுட்டு இருக்கும்.. விஜய் அண்ணா உள்ள புகுந்து அவங்கள சேர்த்து வச்சிட்டு கடைசில தனியா கிளம்பிருவார்.. ஆனந்தம் ஆனந்தம் பாடும்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் பின்றீங்களே டா ரகம்.

வடிவேலுவும் அவரின் நண்பரும் டீ கடையில் சண்டை போட்டுவிட்டு, சமாதானம் ஆவார்கள். அப்போது வடிவேலு வாழைத்தாரை எடுத்துவிட்டு, "இதெல்லாம் இப்போ எடுத்த தான் உண்டு" என்பார். அதனை அப்படியே மாற்றி, "அதை விடு.. ராஜேஸ்வரியையே தோக்கடிச்ச ஊரு தான இது.. யாரு அது ராஜேஸ்வரி. எங்க அத்தை.. வார்டு கவுன்சிலர்க்கு நின்னுச்சு.. இந்த மாதிரி நேரத்துல சொன்னா தான் உண்டு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.













Click it and Unblock the Notifications