நீங்கதான் காப்பாத்தணும் கடவுளே.. பாயசத்தை போட்டதே நான்தான்டா!
சென்னை: மனித வாழ்க்கை எப்போதுமே சோதனைகளும் சிரமங்களும் நிறைந்த ஒரு பயணம் தான். எத்தனை வளம் இருந்தாலும், எத்தனை அறிவு இருந்தாலும், சில தருணங்களில் மனிதன் தன்னால் செய்ய எதுவும் முடியாத நிலையில்தான் தள்ளப்பட்டுவிடுகிறான். அப்படிப்பட்ட தருணங்களில் அவன் மனம் தேடும் முதல் விஷயம் கடவுள்.
கஷ்டம் வரும் போதெல்லாம், 'இந்தப் பிரச்சனைக்கு முடிவு எங்கு கிடைக்கும்? யாரிடம் சொன்னால் ஆறுதல் கிடைக்கும்?' என்று அவன் தேடும் போது, முடிவுக்கு வருகின்ற ஒரே இடம் கோயில்களே. எந்தக் கடவுளை வழிபட்டால் தீர்வு கிடைக்கும், எந்தக் கோயிலுக்கு சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்று எண்ணி, மனிதன் ஒரு நம்பிக்கையோடு தெய்வத்தை நாடுகிறான்.

பெரும்பாலானோர் கோயிலுக்குச் செல்வது வெறும் சடங்குக்காக அல்ல. அன்றாடம் கோயிலுக்கு செல்வது மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைப்பதற்கே. தன்னால் யாரிடமும் சொல்ல முடியாத மனவேதனையை, கடவுளிடம் கூறும்போது மனம் சற்றே சாந்தமாகிறது. 'நான் மட்டுமல்ல, என்னோடு இன்னொருவர் இருக்கிறார்' என்ற உணர்வை கோயில் மனிதனுக்குக் கொடுக்கிறது.
இப்படி மனம் சோர்ந்த மனிதனை தாங்கி நிற்பது கடவுளின் பெயரில் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையே. இதை இன்னும் ஒருபடி மேலே போய் நெட்டிசன்கள் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. கடவுளுக்கும் மீம்ஸ் க்ரியேட் செய்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார்கள். இது உங்களுக்கும் பொருந்தும் என்றால் கமெண்ட் பண்ண மறக்காதீங்க.





















Click it and Unblock the Notifications