எனக்கு பயம் இல்ல.. அதுக்கு சாம்பிள் இதுதான்!
சென்னை: தூக்கம் என்பது ஒரு மனிதன் நலமுடன் வாழ்வதற்கான அடிப்படை அம்சங்களில் முக்கியமான ஒன்று. தினமும் பல வேலைகளால் சோர்ந்து வாடும் உடல் மற்றும் மனதிற்கு ஒரே வழி நிம்மதியான, தடையில்லா உறக்கம். அந்த உறக்கம் கிடைக்கும் சில மணி நேரங்கள் தான், சிலருக்கு ஓய்வின் பரிசாக இருக்கிறது. ஆனால், அந்த தூக்கத்தைக் கூட நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலை சில நேரங்களில் ஏற்பட்டுவிடுகிறது.
இதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று ராத்திரியில் உலாவும் கொசுக்கள். இவை மனிதனின் தூக்கத்தையே கெடுத்து வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சிறிய உயிரினங்கள் தான் என்றாலும், இவற்றின் தொல்லை ஒரு பெரிய துன்பம் போலவே மாற்றிக்கொள்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில், இவற்றின் அட்டூழியம் மேலும் அதிகரித்து விடுகிறது. ஒரு நிமிடம் கவனம் இல்லாமல் ஜன்னல் அல்லது கதவை திறந்து விட்டால் போதும், ஒரு கூட்டமாக வீட்டிற்குள் நுழைந்து தாக்க துவங்கி விடுகின்றன.

தொடர்ச்சியாக கடித்து, உடலை முழுவதும் தொந்தரவு செய்து, தூக்கத்தைக் குழப்பி, ஒருவகையான ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. அதற்கும் மேல், காதுக்குள் சுருண்டு, "ஞீ...ஞீ..." என்ற ஒலியுடன் தூக்கத்தை விரட்டி விடுகின்றன.
இந்த கொசு தொல்லை தற்போது சமூக வலைதளங்களிலும் ஒரு நகைச்சுவை கலந்த கலாசாரமாக மாறியுள்ளது. "தூக்கம் கெடுக்கிற தோழி கொசு", "நள்ளிரவிலும் காதில் காதலியாக மாறி எழுப்பும் உயிரினம்" என மீம்ஸ்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.



















Click it and Unblock the Notifications