அனல் பறக்கும் மாநாடு.. நிஜமாவா.. ஆமாங்க வெயில் கொளுத்துது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டின் வெற்றிக்குப் பிறகு, இம்முறை இன்னும் சிறப்பாக நிகழ்ச்சி அமைய வேண்டி தவெக நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் சிரமமின்றி பங்கேற்க, தண்ணீர் வசதியில் இருந்து அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
மாநாடு நடைபெறும் பாரபத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மேடை மற்றும் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1.5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டதால், பாதுகாப்பு மற்றும் மக்கள் வசதிகளுக்கான திட்டங்கள் பல செய்து வைத்துள்ளனர்.

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டுக்காக 100 அடி உயர கொடிக்கம்பம் கிரேன் மூலம் நிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் பெல்ட் கழன்று, 10 டன் எடையுள்ள கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து, அருகில் நின்றிருந்த நிர்வாகியின் இன்னோவா காரின் மீது விழுந்தது. காரின் மேல் பகுதி சேதமடைந்தாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, விஜய் ரசிகர்கள், தொண்டர்கள், பெண்கள் என பலரும் 2 நாட்களாக புறப்பட்டு மதுரையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு ஏற்படுத்த பட்டிருந்த தண்ணீர் வசதிகள் சரியாக கிடைக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் பரவி வர, நெட்டிசன்கள் மீம்ஸ்களை இணையத்தில் பறக்க விட ஆரம்பித்து விட்டனர்.





















Click it and Unblock the Notifications