இப்போது மிக்ஸர் சாப்பிடுவது நாம்தான் மக்களே! ஆர்சிபியை கலாய்த்த நெட்டிசன்ஸ்.. ஐபிஎல் மீம்ஸ்
சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி இதுவரை பெரிதாக முக்கிய வீரர்களை ஏலம் எடுக்கவில்லை. கைக்கு வந்த முக்கிய வீரர்களை மிஸ் செய்யவில்லை. அதேபோல் ஆர்சிபி அணி அந்த அணிக்கு ஏற்ற வீரர்களை எடுக்காமல் மிஸ் செய்துள்ளது. இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த ஐபிஎல் ஏலத்தை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இன்று முதல் ஆளாக வந்த அர்ஷ்தீப் சிங்கை சிஎஸ்கே அணி கேட்டது கவனம் பெற்றுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் கேட்டது. இதில் டெல்லி அணி இணைய.. ஏலம் 7.5 கோடி ரூபாய் வரை சென்றது. 7.5 கோடி ரூபாய்க்கு சென்னை போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து குஜராத் அணி போட்டியில் இணைந்தது. பின்னர் 10 கோடி தாண்டி ஏலம் சென்ற நிலையில் 15 கோடி ரூபாய் தாண்டிய நிலையில் ஹைதராபாத் - ராஜஸ்தான் இடையே கடுமையான போட்டி நிலவியது.

15.75 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அர்ஷ்தீப் சிங்கை எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து 18 கோடி ரூபாய்க்கு அவரின் ஏலத்தை இதையடுத்து ஹைதராபாத் உயர்த்தியது. அதை பஞ்சாப் அணி ஏற்றுக்கொண்ட நிலையில்.. அவர் பஞ்சாப் அணிக்கு ஏலம் விடப்பட்டார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான ககிசோ ரபாடாவை குஜராத் அணி எளிதாக எடுத்துள்ளது. இவரை வாங்க மும்பை அணி கடுமையாக போராடியது.

மும்பை அணி எப்போதும் பவுலர்களை அதிக விலைக்கு எடுக்கும். அந்த வகையில் இவரை எடுக்கவும் தீவிரமாக முயன்றது. அதன்படியே 9.5 கோடி ரூபாய் வரை இவரை எடுக்க மும்பை அணி முயன்றது. ஆனால் குஜராத் அணி விடாமல் துரத்தியது. 10.5 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி இவரை எடுக்க முயன்றது. அப்போது பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த விரும்புகிறதா என்று கேட்கப்பட்டது. பஞ்சாப் அணி இதை விரும்பவில்லை என்றதும்.. குஜராத் அணி 10.5 கோடி ரூபாய்க்கு அவரை தூக்கியது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றவர்.. மிட்சல் ஸ்டார்க். கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு அந்த சீசனில் கொல்கத்தா வெல்லவும் ஒரு காரணமாக இருந்தார். 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான மிட்சல் ஸ்டார்க்கிற்கு இந்த முறையும் கடுமையான போட்டி நிலவியது.

டெல்லி அணி தொடக்கத்தில் இருந்தே அவருக்கு ஆர்வம் காட்டியது. கொல்கத்தா அணியும் அவரை மீண்டும் எடுக்க தீவிரமாக முயன்றது. 9 கோடி ரூபாய் வரை இரண்டு அணிகளும் மாறி மாறி போட்டியிட்டுக்கொண்டன. இதில் 9 கோடிக்கு பின் வேகம் குறைய பெங்களூர் அணியும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆனது. பெங்களூர் அணிக்கு நல்ல வீரர் வேண்டும் என்பதால்.. பெங்களூர் அணியும் தீவிரமாக முயன்றது.
கடைசியாக 11.75 கோடி ரூபாய்க்கு மிட்சல் ஸ்டார்க் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி அணி புதிய பவுலிங் குழுவை உருவாக்கும் நிலையில் இந்த ஏலம் கவனம் பெற்றுள்ளது.

ஆனால் சிஎஸ்கே அணி முக்கியமான வீரர்களை ஏலம் எடுக்காமல் போனதை நெட்டிசன்கள் இப்போது மிக்ஸர் சாப்பிடுவது நாம்தான் என்று நடிகர் சூர்யாவின் பல ட்விட் ஒன்றை பகிர்ந்து கிண்டல் செய்கின்றனர். அதேபோல் 8 கோடி ரூபாய்க்கு மேலே ஆட்டோ செல்லாது என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இன்று தொடக்கத்திலேயே முகமது ஷமியை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி தீவிரமாக முயன்றது. கொல்கத்தா அணியுடன் சிஎஸ்கே அணி தீவிரமாக மோதியது. பின்னர் இந்த மோதலில் லக்னோ அணி இணைந்தது. ஆனால் 5 கோடி ரூபாய்க்கு மேல் சிஎஸ்கே அணி பெரிதாக ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் போட்டி கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையே சென்றது. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணியும் போட்டியில் ஐக்கியம் ஆனது. இறுதியாக 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் ஷமி எடுக்கப்பட்டார் .

இரண்டு பேரையும் 7 - 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்க சிஎஸ்கே முயன்றது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சிஎஸ்கே பின்வாங்கியது. இதேபோல்தான் சாஹலை எடுக்க தொடக்கத்தில் சிஎஸ்கே முயன்றது. அவரும் 8 கோடி ரூபாயை தாண்டுகிறார் என்றதும் சிஎஸ்கே பின்வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி ரூபாயை பர்சில் வைத்துள்ளது. இதன் காரணமாகவே வீரர்களுக்கு நிறைய தொகை தர விரும்பவில்லை. ஏனென்றால் வேறு சில வீரர்களை சிஎஸ்கே 10 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்க முயற்சி செய்யலாம். இதுதான் சிஎஸ்கே அணிக்கு இடிக்கிறது. அதேபோல் ஆர்சிபி அணி இன்று கே எல்ராகுல் , சிராஜ், சாஹல் , ஷமி என்று பல வீரர்களை மிஸ் செய்துள்ளது. ஆர்சிபியின் இந்த செயலையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications