கடவுளையே வாழ்க்கையை வெறுக்க வைத்துடுவார் போல ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து தெளிவாக கூறாததால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சென்னை: ரசிகர்களுடனான இன்றைய மீட்டிங்கின் போதும் வழக்கம்போல் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி குழப்பினார். இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் அவர் கூறியதை வைத்து கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்தின் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். அதற்கேற்றார் போல் தனது படங்களில் வசனங்களும் ரசிகர்களை எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கும்.
தற்போது தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழலில் இன்று ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தான் அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலேயே பேசியுள்ளார்.
இன்றாவது முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்தையே சந்தித்தனர். இந்நிலையில் ரஜினியின் பேச்சை கிண்டலடித்து கருத்துக்களை கூறுவதோடு மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
|
கண்டுபிடிக்க முடியலையே
#ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? புரியாமலேயே 21 ஆண்டுகள் போயிருச்சே. யாராலேயும் கண்டுபிடிக்க முடியலையே என கலாய்க்கிறார் இந்த வலைஞர்..
|
கடவுளையே..
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி,ஆனா நூறு தடவையும் சொன்னதையே தான் சொல்லுவேன்.
கடவுளையே வாழ்க்கையை வெறுக்க வைத்துடுவார் போல
|
இமயமலைக்கு போய்டுவாரு
எந்திரன் 2 ரீலீஸ்க்கு பிறகு ஆண்டவர் என்ன சொன்னாருனு கேட்டா பக்கத்துல இருந்த ஆண்டவன
காணோம்னு தேட இமயமலைக்கு போய்டுவாரு என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்..
|
அப்படி சொன்னா அவுக
என்னத்த கேட்டாலும் கடவுள் கையில் இருக்குனு சொன்னா அது,
#ரஜினி
என்னத்த கேட்டாலும் பின்பு அறிவிக்கிறேனு சொன்னா அது,
#தீபாம்மா..
|
21 வருடங்களாம்..
#ரஜினி அரசியலுக்கு வந்து #21 வருடங்களாம்... மற்றொருவர் போட்டுள்ள கருத்தை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்..
|
வரும் ஆனால் வராது!
#ரஜினி #அரசியல்
வரும் ஆனால் வராது! ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என குழப்பி வருவதை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..












Click it and Unblock the Notifications