வாழ்க்கைல முன்னேறி காரு, பங்களானு வாழணும்னு கனவு வர்றப்பதான்.. ரீசார்ஜ் முடிஞ்சுடுது!
சென்னை : மாதக்கடைசி ஆகி விட்டாலே மக்களுக்கு கையில் காசில்லையே என்ற மன அழுத்தம் தானாக வந்து விடுகிறது. இது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே நன்கு தெரிகிறது.
ஒரு வழியாக ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் ஆரம்பிக்கப் போகிறது. புது மாதம் பிறந்தாலே சம்பளம் வரும் என்ற சந்தோசமும் மக்களுக்கு வந்து விடும். என்னதான் ஆயிரத்தெட்டு கமிட்மெண்ட்கள் இருந்தாலும், சம்பளம் வருகிறது என்பதே அவர்களுக்கு ஒரு நிம்மதிதான். ஆனால் அந்த சம்பளத் தேதிக்கு முன்னர் கையில் காசில்லாமல் வரும் மன அழுத்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இப்போதும் அப்படித்தான் கையில் காசில்லை என்பதை நேரடியாகவும், தூக்கம் வரவில்லை, மன அழுத்தம் என வெவ்வேறு பெயர்களிலும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் பகலில் கூட வேலைகளில் மனம் கொஞ்சம் கவலைகளை மறந்து விடுகிறது. ஆனால் இரவில் தூக்கம் வருவதற்கு முன்னர் இந்த கவலைகள் வந்து கட்டில் போட்டு படுத்து விடுகின்றன என மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர்.
"இவ்ளோ மனஉளைச்சலுக்கு மத்தவங்கனா இந்நேரம் மெண்டலாகியிருப்பாங்க.. நா ஆல்ரெடி மெண்டல்ங்கறதால தப்பிச்சேன்!" என்றும், "வாழ்க்கைல முன்னேறி காரு, பங்களானு வாழணும்னு கனவு வர்றப்பதான்.. கரெக்ட்டா ரீசார்ஜ் முடிஞ்சுடுது!" என்றும் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications