For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு இந்தியில் நன்றி டுவீட்டிய நெதர்லாந்து பிரதமர்.. ஓட்டித் தள்ளிய நெட்டிசன்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்து நெதர்லாந்து பிரதமர் இந்தியில் நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவீட் நெட்டிசன்களால் செமையாக ஓட்டி எடுக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் குறித்து நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டே இந்தியில் டுவீட்டிய பதிவு சமூக வலைதளத்தில் விவாதத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

3 நாள் அரச முறைப் பயணமாக போச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு திரும்பியுள்ளார். இந்தியா நெதர்லாந்து இடையேயான தூதரக உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அந்த நாட்டிற்கு பிரதமர் சென்று திரும்பினார். எனவே மரியாதை நிமித்தமாக பதில் அளிக்கும் வகையில் டுவீட் போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான்.

வழக்கமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு மொழியில் டுவிட்டரில் கருத்து சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் வழியிலேயே நெதர்லாந்து பிரதமரும் இந்தியில் நன்றி டுவீட்டியுள்ளார். இது இரு நாடுகளிடையேயான நல்லுறவுக்கான கருத்துப் பரிமாற்றம் என்று பார்க்கப்படுகிறது.

இந்தியில் டுவீட்டிய நெதர்லாந்து பிரதமர்

"நெதர்லாந்திற்கு வந்ததற்கு நன்றி நரேந்திர மோடி, இரு நாட்டு தூதரக உறவு தொடங்கி 70 ஆண்டுகள் முடியும் நிலையில் உங்களை சந்தித்தது சந்தோஷம்" இது தான் அவர் டுவீட்டிய பதிவின் சாராம்சம். நல்ல விஷயம் தான சொல்லியிருக்காரு ஆனால் இதை ஏன் நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள் தெரியுமா? இந்தியில் டுவீட்டிய நெதர்லாந்து பிரதமர் வார்த்தைகளுக்கிடையே இடைவெளி விட மறந்ததால் அதன் அர்த்தம் புரியவில்லை என்று செமையாக ஓட்டிவிட்டனர். இதனால் பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே நெதர்லாந்து பிரதமரின் டுவீட் வைரலாகிவிட்டது.

நெருக்கத்தை காட்டுகிறது

இது நல்ல பதிவு தான். இரு நாடுகளிடையேயான இடைவெளியை அகற்றி ஒற்றுமையை காட்டுகிறது என்ற நல்ல விதமாக கருத்து தெரிவித்துள்ளார் ஒரு நெட்டிசன்.

பங்குச்சந்தை குரல்

பங்குச்சந்தை குறித்த விளம்பரங்கள் வரும் போது மூச்சு விடாமல் பேசுபவரின் குரலோடு ஒப்பிட்டு நக்கலடித்துள்ளார் மற்றொரு வலைபதிவர். மியூச்சுவர்பண்ட்விளம்பரங்கள்சந்தைஅபாயத்திற்குஉட்பட்டவைமுதலீடுசெய்யும்முன்விதிமுறைகளைபடிக்கவும் என்பது போல உள்ளது நெதர்லாந்து பிரதமரின் டுவீட் என்று வாரியுள்ளார்.

விடுபட்ட ஸ்பேஸ்

கம்ப்யூட்டர் கீ போர்டில் இருக்கும் ஸ்பேஸ் பார் விடுபட்டதை விட வேறு எந்த குறையும் இல்லை என்று கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன். இதே போல ஸ்பேஸ் பாரை போட்டும் கிண்டலடிக்கின்றனர்

கசகசன்னு இருக்கே

ஒரு தட்டில் பல வித பதார்த்தங்களை நெருக்கியடைத்தார் போல வைக்கப்பட்டள்ளது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் இந்த நெட்டிசன். இதற்காக ஒரு புகைப்படத்தையும் அவர் தட்டி விட்டுள்ளார்.

பாராட்டலாம்

இந்தி அவரது மொழி இல்லை, என்ற போது அவர் முயற்சித்துள்ளார். அவரது முயற்சி பாராட்டிற்குரியதே என்று பாராட்டு டுவீட்டுகளும் வந்துள்ளன நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டே.

தெரிஞ்சு தான் செஞ்சாரா?

ஒரு வேளை டுவிட்டரில் 140 கேரக்டர்கள் தான் பதிவிட முடியும் என்பதால், இப்படி நெருக்கியடித்து டுவீட் போட்டாரா மார்க் ரட்டே. இப்படியான செய்தியுடன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

English summary
Netherland PM's Hindi tweet goes viral after it has no space in between the words were trolled by netizens
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X