நெட்டிசன்ஸ் ஸ்டார்ட் மியூசிக்... - வலையில் சிக்கி சின்னாபின்னமாகும் தீபா கணவர் மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வசித்தாலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அவரது கணவர் மாதவனும் இப்போது தனித்தனி. தீபா பேரவை தொடங்க மாதவனோ தனிக்கட்சி தொடங்கப் போவதாக கிளம்பவோ விடுவார்களா நெட்டிசன்ஸ் வறுத்து எடுத்து வருகின்றனர்.

ஜெயலலிதா சமாதியில் போய் ஆள் ஆளாக்கு தியானம் செய்து அதை தியானமண்டபமாக மாற்றி விட்டனர். பகலில் போனா கூட பரவாயில்லை இரவு நேரங்களில் போய் ஆள் ஆளுக்கு பேட்டி வேறு கொடுத்து பரபரப்பை கிளப்புகின்றனர்.

ஜெயலலிதா சமாதியில் போன வாரம் தீபா தனது கணவர் தோழியுடன் தியானம் செய்து விட்டு பேட்டி கொடுத்தார். அந்த பரபரப்பு முடிந்த சில தினங்களில் அவரது கணவர் மாதவன் ஜெயலலிதா சமாதிக்கு போய் தனி கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.

தீயசக்திகள்

தீயசக்தி என்ற வார்த்தைய எம்ஜிஆர் எந்த நேரத்தில் பயன்படுத்தினாரோ இப்போது எல்லோருடைய வாயிலும் படாத பாடு படுகிறது. தீபாவின் கணவரும் அதை கூறியுள்ளார். தீபாவை சுற்றி தீயசக்திகளாவது இருக்கிறார்களே என்று சந்தோசப்படுங்கள் என்று வலைஞர்கள் கிண்டலடிக்கின்றனர்.

தனிக்கட்சி

வீட்டில் இருப்பது இரண்டு பேர் இதில் மனைவி பேரவை தொடங்கினால் கணவர் கட்சி தொடங்குகிறார். இதற்கு இந்த கவுண்டமணியின் லுக் பதில் சொல்லி விடும்.

யார்? யார்?

ஜெயலலிதா சமாதியை இரவு நேர தியான மண்டபமாக பலரும் பயன்படுத்துவதால் இப்போது தீபா, மாதவனும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இருவருடனும் இருக்கும் தீய சக்திகள் யார் என்று சொல்வார்களா என்று கேட்டுள்ளார் இந்த வலைஞர்.

வைகோவை பார்த்துட்டு போ

ஆர்.கே. நகரில் போட்டியிடப்போவதாக தீபா கூறி வருவதால் அதை கிண்டலடிக்கும் விதமாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தடவை வைகோ பார்த்து விட்டு போகச் சொல்கிறார் ஒரு வலைஞர்.

தனிக்கட்சி

வீட்டில் தினம் தினம் உப்புமா செய்து கணவருக்கு ஆயுள் தண்டனை தரும் மனைவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் ஒரு வலைஞர். தனிக்கட்சி தொடங்கப்போகிறாராம் இவர். தீபாவிற்கு எதிராக மாதவன் போர்க்கொடி உயர்த்தியது இவரை உசுப்பிவிட்டது.

தூக்கி வளர்த்த புள்ளை

தீபாவின் கணவர் மாதவன் நான் தூக்கி வளர்த்த புள்ளை என்று புரட்சிப்புயல் வைகோ கூறுவதாக பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். அட மாதவன் மேட்டர்ல கூட வைகோவை விட மாட்டேங்கிறாங்களே!

கொசுத்தொல்லை

நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ளன. இதில் மாதவனும் தன்னை நம்பி வந்துள்ள தொண்டர்களுக்காக கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியுள்ளார். நாராயண கொசுத்தொல்லை தாங்க முடியலைடா என்கின்றனர் வலைஞர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Memes creators and Netizens are join hand and attack Deepa husband Madhavan.
Please Wait while comments are loading...