காஷ்மீர் ஃபியூட்டிபுல் காஷ்மீர் பாடுன வாயா இப்படி பேசுது.. நெட்டிசன்ஸ் ரகளை
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தற்கொலை செய்ய தயார் என கூறிய நவநீத கிருஷ்ணனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தற்கொலை செய்ய தயார் என கூறிய நவநீத கிருஷ்ணனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்ய தயார் என நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
நவநீத கிருஷ்ணனின் இந்தப் பேச்சு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் நவநீதகிருஷ்ணனின் கருத்து குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
தற்கொலை பண்ணிப்போம்
'அ.தி.மு.க எம்.பி-க்கள் அனைவரும் தற்கொலை செய்வோம்'- மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன்.. ஆமாம்.. ராஜினமா பண்ண மாட்டோம்.. ஆனா தற்கொலை பண்ணிப்போம்
|
பொய்சொல்லலல்ல
சொன்ன சொல் தவறமாட்டன் இந்த கோட்டைச்சாமி...
என்ன பஞ்சாயத்து பொய்சொல்லலல்ல....
|
பாடுன வாயா இப்படி பேசுது
காவிரி மேலைாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம்...
காஷ்மீர் ஃபியூட்டிபுல் காஷ்மீர் பாடுன வாயா இப்படி பேசுது...
|
கொலை கேசுல
தமிழர்கள் ராஜினாமா செய்ய சொல்கிறார்கள்.. நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம். - நவநீதகிருஷ்ணன்.
இது மத்திய அரசுக்கு கொடுக்கும் அழுத்தம் அல்ல... ராஜினாமா செய்ய சொன்னால் செத்துடுவோம்னு தமிழக மக்களை எச்சரிக்கிறார்... பூரா பயபுள்ளையும் கொலை கேசுல உள்ள போக போறிங்க
|
லிஸ்ட்லயே இல்லையே
அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..












Click it and Unblock the Notifications