சென்னைவாசிகளே! வீட்டு விசேஷங்களை நவம்பர் டிசம்பர் மாதங்களில் வைக்காதீங்க… வரவே பயமா இருக்கே!

சென்னையில் காலை முதல் வெயில் காய்ந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை முதல் வெயில் காய்ந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

இன்று அதிகாலைக்குப் பிறகு சென்னையில் மழை பெய்யாமல் வெயில் காய்ந்து வந்தது. இந்நிலையில் பிற்பகலுக்குப் பிறகு மீண்டும் மழை வெளுக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் விட்டு விட்டு மழை பெய்வதை தெளிய விட்டு தெளியவிட்டு அடிப்பதாக சமூகவலைதளங்கள் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர். சென்னை மழை குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

சென்னை மழைதான்!

தெளிய வைத்து அடிப்பதில் கில்லி வாழ்க்கைக்கு பிறகு சென்னை மழைதான்!! #சென்னைமழை என்கிறார் இந்த வலைஞர்

தலைநகரம் எங்களுக்கு தான்

ப்ரோ சென்னை மக்கள் மழையால அவதிபடுறாங்க, மழை வந்தா தண்ணி நிற்காத ஊர் திருச்சி.. மழையே வராத ஊர் சேலம் தலைநகரம் எங்களுக்கு தான்... என்கிறார் இந்த நெட்டிசன்

தண்ணீரில் மிதக்க வைத்தான்..!

மற்ற மாவட்டங்கள் : "மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது..!"
சென்னை: "தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்..! என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்

வரவே பயமா இருக்கே

அய்யா சென்னைவாசிகளே! வீட்டு விழாக்களை நவம்பர் டிசம்பர் மாதங்களில் வைக்காதீங்க... வரவே பயமா இருக்கே!
#சென்னைமழை.. என டிவிட்டியுள்ளார் இந்த நெட்டிசன்

மறியல் செய்யும் மழை

சென்னை வெள்ளம்.. மழை அதன் காணாமல் போன ஏரியை மீட்க சாலை மறியல் செய்கிறது.. என்கிறார் இந்த வலைஞர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+