உங்க அக்க போருக்கு அளவே இல்லையா... தீபா-மாதவனை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  போலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய மாதவன் - வீடியோ

  சென்னை: ஐடி ரெய்டு என தீபாவின் கணவர் மாதவனே ஆள் செட்டப் செய்தது தெரியவந்துள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  தீபாவின் வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை வந்த நபர் ஒருவர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என கூறி அதற்கான போலி அடையாள அட்டையையும் காண்பித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் போலி என தெரியவந்தது.

  போலீசாரிடம் சரணடைந்த அவர் தீபாவின் கணவர் மாதவன் கூறியதாலேயே ஐடி அதிகாரி போல் நடித்ததாக தெரிவித்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏரளாமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  இந்த வார காமெடியன்

  இந்த வார காமெடியன். மாதவன், தீபா புருசன்.. என்கிறார் இந்த வலைஞர்

  பழைய ஏற்பாடா?

  "ஏற்பாடு ஃபெடரிக் மாதவன்"!!
  (புதிய ஏற்பாடா? பழைய ஏற்பாடா?) என கேட்கிறார் இந்த நெட்டிசன்

  அளவே இல்லையா

  தீபா கணவர் மாதவன் கூறியதால் போலி அதிகாரியாக நடித்தேன் என பிரபாகரன் வாக்குமூலம்
  உங்க அக்க போருக்கு அளவே இல்லையா... என்று கலாய்க்கிறது இந்த டிவிட்

  தீபா திட்டுறத நினைச்சதான்

  தீபாவின் கணவர் மாதவன் சொல்லித்தான் போலி ஐடி அதிகாரியாக நடித்தேன்
  மாதவன் - ஐய்யய்யோ போலீஸ்கிட்ட கூட தப்பிக்கலாம் இந்த தீபா எச்சக்கலன்னு திட்டுவாளே.. என கலாய்க்கிறது இந்த டிவிட்

  அது போனவாரம்

  ஜெ.தீபாவின் கணவர்தான் ஐ.டி அதிகாரியாக நடிக்கச் சொன்னார்: சரணடைந்தவர் குற்றச்சாட்டு
  போலீஸ்:போனவாரம் தான உன் கார் கண்ணாடிய நீயே டிரைவர வச்சு உடைச்ச..
  மாதவன்:அது போனவாரம்.. என்று கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens making fun of IT raid drama in Deepa's house. A person surrender to the Police who acted as a IT official in the Deepa's house on Saturday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற