இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு நடப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒரு குடும்பத்துக்கு எதிராக மொத்தமாக களம் இறக்கப்பட்ட வருமான வரித்துறை..வீடியோ

    சென்னை: சசிகலா குடும்பத்தினர் மற்றும் ஜெயா டிவி ஆகிய இடங்களில் ஐடி ரெய்டு நடப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் என கூறப்படுகிறது.

    சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மாபெரும் ரெய்டு

    ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் மாபெரும் ரெய்டு.. என்கிறார் இந்த நெட்டிசன்

    சோதனை செய்வதில்லை?

    ஐடி ரெய்டு ஒரே மாதிரி இருக்க வேண்டும்.. ஏன் பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை? என கேட்கிறார் இந்த வலைஞர்

    எங்கெங்கோ..

    இருக்கும் இடைத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே.. என்கிறது இந்த டிவிட்

    மொய் கோடிக்கணக்கில்

    திருமண ஸ்டிக்கருடன் வாடகை காரில் ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறையினர்! மொய் கோடிக்கணக்கில் வரப்போகிறது.. என்கிறார் இந்த நெட்டிசன்..

    அத்தனை இடங்களிலும் ரெய்டு

    சசசிகலா உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறை தவிர... மற்ற அத்தனை இடங்களிலும் ரெய்டு! என்கிறார் இந்த வலைஞர்

    மத்ததெல்லாம் தெரியாது

    மோடி தமிழ்நாட்டுக்காக ஐடி ரெய்டு மட்டும்தான் அனுப்புவாரு.
    மத்ததெல்லாம் தெரியாது.. என்கிறார் இந்த நெட்டிசன்..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+