சட்டங்கள் மக்களை திருத்துவதற்கு.. கொல்வதற்கு அல்ல.. தமிழிசைக்கு நெட்டிசன்கள் பதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மது வாங்க முடியாத அளவுக்கு விலையை உயர்த்த வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு பீர் விலையில் 10 ரூபாயும் குவாட்டர் விலையில் 12 ரூபாயும் உயர்த்தி நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வாங்க முடியாத அளவுக்கு விலையை உயர்த்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து கருத்து நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில

அதற்கு பதில்..

அதுக்கு பதிலா...விற்க முடியாத அளவுக்கு தடை விதிக்க வேண்டும்...இல்லையா... என்கிறார் இந்த நெட்டிசன்

சம்பாதிக்க சொல்லலை

மக்கள குடி பழகக்கத்துக்கு அடிமையாக்கிட்டு இப்ப விலைய உயர்த்தினா மட்டும் குடிய நிறுத்திடுவாங்களா? நாங்க தடையே பண்ணிடுங்கன்னுதான் சொல்றோம்.. விலையை உயர்த்தி சம்பாதிக்க சொல்லலை என்கிறார் இந்த நெட்டிசன்..

பார் விலைக்கு வித்தா

பஸ் ஏறி பாண்டிசேரி குடிக்க போரான்.. பார் விலைக்கு வித்தா குடிக்காம போக போரானா?? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

பாத்துக்கங்க சரியா

அப்புரம் ஆளாலுக்கு சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சிடுவாங்க பாத்துக்கங்க சரியா !!! என வார்னிங் கொடுக்கிறார் இந்த வலைஞர்

கொல்வதற்கு அல்ல

இதனால் மேலும் பாதிக்க படுவார்கள்... சட்டங்கள் மக்களை திருத்துவதற்காக... கொல்வதற்கு அல்ல... என்கிறது இந்த டிவிட்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilisai saundararajan said alcohol price should be raised which can not buy by the people. For that netizens condemns Tamilisai and urged to ban alcohol.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற