For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொசுக்களை பிடிக்க 16 கோடி செலவில் 30 தனிப்படை அமைக்கப்படவுள்ளது.. நெட்டிசன்ஸ் ரகளை!

டெங்கு கொசுக்கள் வெளியூர்களில் இருந்து வருவதாக அதிகாரிகளும் எம்பி காமராஜும் கூறியதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: டெங்கு கொசுக்கள் வெளியூர்களில் இருந்து வருவதாக அதிகாரிகளும் எம்பி காமராஜும் கூறியதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் டெங்கு கொசுக்கள் சேலம் மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆம்னி பஸ்களில் வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல் அதிமுக எம்பி காமராஜ் டெல்லி கொசுக்களால் தான் தமிழகத்தில் டெங்கு பரவுவதாக தெரிவித்துள்ளார். இதனை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

டிக்கெட் எடுக்காததால் நஷ்டம்

பேருந்துகளில் கொசு பயணம்: அவை டிக்கெட் எடுக்காததால், பேருந்து நிறுவனங்கள் நஷ்டம்னு அடுத்த குண்டு போடுவாங்களே! என கலாய்க்கிறது இந்த டிவிட்

தனிப்படைகள் அமைப்பு

கொசுக்களை பிடிக்க 16 கோடி செலவில் 30 தனிப்படைகள் அமைக்கபடவுள்ளது.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

யாரு டிக்கெட் எடுத்து கொடுத்திருப்பா?

டெல்லி கொசுக்களால் தான் தமிழகத்தில் டெங்கு பரவுகிறது-காமராஜ் இந்த கொசு எல்லாம் யாரு ப்ளைன் டிக்கெட் கொடுக்குரது #கொசு தொல்லை தாங்கலப்பா என்கிறார் இந்த வலைஞர்

பஸ்லயா வருது?

டெல்லியில் இருந்து கொசு பஸ்ஸில் வருதா? நான் விமானத்தில் வருதுன்னு நினச்சேன் என்கிறார் இந்த நெட்டிசன்

கொசு வலை போட்டு மூடிருங்க

செல்லூர் பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ.. பேசாம செல்லூர் பூராம் கொசு வலை வாங்கி போட்டு மூடிருங்க.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்

English summary
Netizens mocking the officials and ADMK MP who said dengue mosquitoes are from salem, madurai and delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X