நான் எதுவும் பண்ண முடியலையே.. கடும் வருத்தத்தில் விஜய்.. அப்செட்டான ரத்தன் பண்டிட்.. என்னாச்சு?
சென்னை: தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், தனது சிறப்புச் செயலாளர் மற்றும் அரசியல் ஆலோசகர் நியமன விவகாரத்தில் கடுமையான மனவருத்தத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகியிருப்பதுதான். கட்சியின் மிக முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டிட், கடுமையான விமர்சனங்கள் காரணமாக சில நாட்களிலேயே நீக்கப்பட்ட விவகாரம், முதல்வர் விஜயை பெரும் சங்கடத்திற்குள் தள்ளியுள்ளது.

ஆலோசகர் நீக்கமும், முதல்வரின் மனவேதனையும்
தமிழக அரசியலில் சமீபகாலமாகவே தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், விஜய்யின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதும், அதற்கு எழுந்த கடும் விமர்சனங்களால் அவர் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
போயஸ் கார்டன் டூ டெல்லி லேடீஸ்
ரிக்கி ரத்தன் பண்டிட் ஒன்றும் தமிழக அரசியலுக்குப் புதியவர் அல்ல. ஒரு காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வட்டாரத்தில் மிக நெருக்கமாக வலம் வந்தவர் இவர். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த இவர், பின்னர் அ.தி.மு.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) ஒருவரின் மூலமாக டெல்லி அரசியல் வட்டாரத்திற்குள் நுழைந்தார்.
அந்த முன்னாள் எம்.பி, பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மிக முக்கியப் புள்ளியும், எல்.கே. அத்வானிக்கு நெருக்கமானவருமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்த ஜோதிடரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்தப் பா.ஜ.க பிரமுகர் மூலமாக, நேரடியாக அத்வானியின் இல்லத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டார் ரிக்கி ரத்தன் பண்டிட்.
அத்வானிக்கு கொடுத்த 'பிரதமர்' வாக்குறுதி
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில், பா.ஜ.க-வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு பிரதமர் நாற்காலியின் மீது அலாதியான ஆசை இருந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர், அத்வானியின் ஜாதகத்தைக் கணித்து, "அடுத்த பிரதமர் நீங்கள் தான்" என ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அத்வானியும், அவரது மகள் பிரதிபாவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அது கடைசிவரை நடக்கவே இல்லை.
ஜோதிடம் பொய்த்த நிலையிலும் அசராத ரத்தன் பண்டிட், "கவலைப்படாதீர்கள், 2009 பொதுத்தேர்தலில் பா.ஜ.க வென்று நீங்கள் நிச்சயமாகப் பிரதமர் ஆவீர்கள்" என மீண்டும் அத்வானிக்கு நம்பிக்கை ஊட்டினார். ஆனால், 2009-லும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் பின்னரும் டெல்லியிலேயே முகாமிட்ட இந்த ஜோதிடர், அங்குள்ள பல முன்னணி தொழிலதிபர்களுக்கு ஜாதகம் பார்த்துத் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.
விஜய் கட்சியில் வெடித்த மோதல்
டெல்லி, சென்னை எனப் பல கோடீஸ்வரர்களைத் தன் கைக்குள் வைத்திருந்த ரத்தன் பண்டிட், சமீபத்தில் த.வெ.க தலைவர் விஜய்யின் சிறப்புச் செயலாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். ஆன்மிக அரசியல், பகுத்தறிவு எனப் பல்வேறு கொள்கை குழப்பங்களுக்கு இடையே, ஒரு ஜோதிடரை விஜய் தன் பக்கத்தில் வைத்திருப்பது கட்சியின் இமேஜைப் பாதிக்கும் என சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
விமர்சனங்கள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, ரத்தன் பண்டிட்டை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கினார் விஜய். இந்த திடீர் நீக்கத்தால் ஜோதிடர் தற்போது கடுமையான அதிருப்தியிலும் மன வேதனையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யும் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். எனக்கு நிறைய ஆலோசனைகளை வாங்கியவருக்கு நான் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று விஜய் அப்செட்டில் இருக்கிறாராம்.
விஜய்யின் அரசியல் பயணத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே ஏற்பட்டுள்ள இந்த 'ஜோதிட' சர்ச்சை, தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
-
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம்












Click it and Unblock the Notifications