For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும்பான்மையை காட்டச்சொன்னா இவர் பெருந்தன்மையை காட்டுறார்..! எடியூரப்பா குறித்து நெட்டிசன்ஸ் கலகல

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் கையெழுத்தில் எடியூரப்பா விவசாய கடன்கள் தள்ளுபடி

    சென்னை: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராக பாஜகவின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற கையோடு சட்டசபைக்கு சென்ற அவர், முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

    இந்நிலையில் எடியூரப்பாவின் முதல் கையெழுத்து குறித்தும் அவர் முதல்வராக பதவியேற்றது குறித்தும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

    வெள்ள அபாய எச்சரிக்கை...!

    எடியூரப்பா முதல்வராக பதவியேற்பு...!
    தமிழக காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

    இது என்ன புதுசா, பச்சை!

    கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு !
    எப்பவும் காவி நிற துண்டுதானே ! இது என்ன புதுசா , பச்சை !

    பரிசுப் பொருட்களைப் பெறலாமே!

    அமைச்சர்கள் இன்றி எடியூரப்பா மட்டுமே முதல்வராக பதவியேற்பு.. காரணம் என்ன?
    #பாண்டிய​ மன்னரின் சந்தேகத்தைப் போக்கி,
    பரிசுப் பொருட்களைப் பெறலாமே!

    மனவேதனை அளிக்கிறது...

    கர்நாடகவில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்பு..இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கபட்டது..மனவேதனை அளிக்கிறது...

    "ஜனநாயகம்" அகாலமரணம்

    எடியூரப்பா மட்டுமே முதல்வராக பதவியேற்பு
    அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை, முதல்வர் பதவியேற்பு விழா நிறைவடைந்தது
    "ஜனநாயகம்" அகாலமரணம்

    பெருந்தன்மையை காட்டுறார்..

    பதவி ஏற்றவுடன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் எடியூரப்பா..
    பெரும்பான்மையை காட்டச்சொன்னா இவர் பெருந்தன்மையை காட்டுறார்..

    English summary
    Netizens sharing their views on Yeddyurappa became Chief Minister of Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X