நாமெல்லாம் எந்த மாதிரியான சமுகத்தில் வாழுறோம்..?

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர தாமதித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர தாமதித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சரிகா என்ற பத்தாம் வகுப்பு மாணவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவரது நிலைமை மோசமடையவே பெற்றோர் அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கேட்டனர்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் 7 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வழங்கியது. இதனால் சென்னை மருத்துவமனக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அலட்சியத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவற்றில் சில..

துப்பில்லாமல் போனது

காஞ்சிபுரம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் சிறுநீரகம் செயலிழந்த மாணவி இறந்ததாக புகார்.
ஆம்புலன்ஸ் சேவை இருந்தும் அதை பயன்படுத்த துப்பில்லாமல் போனதுதான் இந்த அடிமை அரசின் அலட்சியம் /சாதனை

தடுக்க முடியவில்லையே..

காஞ்சிபுரம்: ஆம்புலன்ஸ் தாமதம்; மாணவி பலி என புகார் -
எத்தனைதான் கோடி கோடியாய் நிதி ஒதுக்கினாலும், எத்தனைதான் மீடியாக்கள் கதறினாலும், எத்தனைதான் தொழில்நுட்பங்கன் வளர்ந்தாலும் இதுபோல் மரணங்கள் நிகழ்வதை தடுக்க முடியவில்லையே !

சாதாரணமா போச்சா..

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்
ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் சிறுமி சரிகா பலி ~ செய்தி 😥
எப்படி இவனுகளுக்கு ஒரு
உயிர்னா அவ்வளவு சாதாரணமா போச்சா.

வாழுறோம்..?

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் டயாலிஸிஸ் செய்யப்பட்ட சிறுமி மேல்சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு..!
நாமெல்லாம் எந்த மாதிரியான சமுகத்தில் வாழுறோம்..?

என்ன சொல்றதுன்னு தெரியல

7 மணி நேரமாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடிய மாணவிக்கு ஆம்புலன்ஸ் தந்து ராஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கல
செய்திபோட்டதற்கு பிறகு ஆம்புலன்ஸ் கொடுத்தாங்க. சென்னை வருகிற வழியிலேயே 10வது படிக்கிற புள்ளையோடு உசுரு போயிருச்சு
என்ன சொல்றதுன்னு தெரியல

உயிர் பறிபோன பரிதாபம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவிக்கு 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் தராத கொடுமை..
ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் முன்னே உயிர் பறிபோன பரிதாபம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+