For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் நடப்பது நாடாளுமன்றமல்ல மாடாளுமன்றம்: கலாய்க்கும் நெட்டிசன்!

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் திராவிட நாடு கோரிக்கையால் நெட்டிசன்கள் தீவிரமாக தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் டிவிட்டர் தளத்தில் #Dravidanadu என்ற ஹேஷ்டேக் செம ட்ரெண்டாகி வருகிறது.

தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனிநாடு என்ற கருத்தை முன்வைத்து பலரும் தங்களது கருத்துக்களை திராவிடநாடு என்ற ஹேஷ்டேகில் பதிவு செய்து வருகிறார்கள். திராவிட நாட்டிற்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிடப்படும் கருத்துகள் பெரியார், அண்ணாவை நினைவுபடுத்துவதாக பலர் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் இல்லை...

நாட்டு மக்களுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றும் இடம் நாடாளுமன்றம். ஆனால் அந்த நாடாளுமன்றம் மாடாளுமன்றமாகிவிட்டது என்று ஒரு நெட்டிசன் கலாய்க்கிறார்.

திமுக பேச்சாளர் சரவணன் அண்ணாதுரை தனிநாடு கோரிக்கை எங்களை இணைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்காக கேரளாவிற்கும், பாஜகவிற்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

அதே போன்று தனிநாடு கோரிக்கையை தான் வரவேற்பதாக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் டுவீட்டியுள்ளார். சூட்டோடு சூடாக தனி நாட்டிற்கான தலைநகர் சென்னை,ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

English summary
Independent Draviada naadu slogan i going viral in social medias because of ban of central government's announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X