ஆண்டவரே நீங்கள் கூப்பிடுவதற்காக காத்து கொண்டு இருக்கிறோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'அகில இந்திய விவசாயிகள் கட்சி'.. வந்து சேருங்கள்.. கமல் திடீர் அழைப்பு!..வீடியோ

சென்னை: அகில இந்திய அரசியல் கட்சியில் வந்து சேருமாறு நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட டிவிட்டிற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை வந்திருப்பது மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்ர்.

இதுவரை கட்சியில் சேராமல் இருப்பவர்கள் வந்து சேர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது மிக முக்கியமான மக்கள் குரல் என்றும் கமல் தனது டிவிட்டில் தெரிவித்தார்.

இதனால் குழப்பமடைந்த மக்கள் இதுதான் கமலின் கட்சிப்பெயரோ என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கமலின் அந்த டிவிட்டை வரவேற்று ஏராளமான டிவிட்டுகள் குவிந்துள்ளன.

வாழ்த்துக்கள் வித்தாகட்டும்

மாபெரும் மாற்றத்தை முன்னெடுங்கள் ஆண்டவரே. எங்கள் வாழ்த்துக்களே உங்களுக்கு வித்தாகட்டும்... என்கிறார் இந்த வலைஞர்

எல்லோரும் சோத்துக்கட்சிதான்

எந்த ஒரு தேசமும் அதன் மக்களும் , அரசும் விவசாயத்தின் உன்னதத்தை உணர்ந்து, விவசாயம் செழிக்க முனைகிறார்களோ அதுவே முன்னோடி தேசமாகும். எல்லோரும் சோத்துக்கட்சிதான். தொடர்ந்து விழிப்புணர்வு செய்வதற்கு மிக்க நன்றிகள்

விவசாயத்தை காப்பாற்றுங்கள்..

ஒரு விவசாயின் மகனாக கூறுகிறேன் #ஆண்டவரே "விவசாயத்தையும் விவசாயிகளையும்" காப்பாற்றுங்கள்

வாழ்த்துகிறோம்..

உங்கள் நல்ல எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.. என்கிறார் இந்த வலைஞர்

தமிழுக்கு முக்கியத்துவம்

விவசாயிகளை முன்னிருத்தி ஆட்சி நடைபெற வேண்டும். தமிழுக்கு முக்கியத்துவம் வேண்டுகிறோம். கல்வி உரிமைகளை திரும்பபெறவேண்டும்.

நாளைய தமிழகம் உங்களுக்காக

ஆண்டவரே நீங்கள் கூப்பிடுவதற்காக காத்து கொண்டு இருக்குறோம்.. நாளைய தமிழகம் உங்களுக்காக.. என்கிறார் இந்த வலைஞர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens welcomes Kamal haasan tweet. Kamal tweeted that who are all not join in for farmers. they can join immediately.
Please Wait while comments are loading...