For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்தையூரை சண்டையூராக மாற்றிவிடாதீர்கள்... சமூக வலைதளத்தில் கொந்தளிப்பு!

மதுரை மாவட்டம் சந்தையூரில் தீவிரமடைந்து வரும் தீண்டாமை சுவர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சமூக வலைதளங்களில் வலுவான கருத்துகள் எழுந்து வருகின்றன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சந்தையூர் தீண்டாமைச் சுவர் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றமான சூழல்!

    சென்னை: மதுரை மாவட்டம் சந்தையூரில் தீவிரமடைந்து வரும் தீண்டாமை சுவர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சமூக வலைதளங்களில் வலுவான கருத்துகள் எழுந்து வருகின்றன.

    மதுரை மாவட்டம் சந்தையூரில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி ஒரு பிரிவினர் மலைக்கு குடிபெயர்ந்து போராடி வருகின்றனர். சுமார் 56 நாட்களாக வெயில், மழையை பொருட்படுத்தாமல் இவர்கள் மலை மீது சமைத்து சாப்பிட்டு போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மதம் மாறப் போவதாகவும் கூறியுள்ளனர். நாளுக்கு நாள் சந்தையூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக நடவடிக்கை தேவை என்று சமூக அக்கறையுடனும் பொறுப்புடனும் சில கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில இதோ.

    பெரியார், அம்பேத்கர் பிறந்து வரவேண்டுமா?

    சந்தையூர் பிரச்சனைக்கான தீர்வு என்ன அதை முடிப்பதற்கு பெரியார் அம்பேத்கார்... தான் மீண்டும் பிறந்து வர வேண்டுமா?. நாமே இதற்கான தீர்வை காணலாமே என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் இந்த வலைபதிவர்.

    சண்டையூராக மாற்றிவிடாதீர்கள்

    சந்தையூர் இனிமேலாவது சமத்துவ ஊராகட்டும்... சண்டையூராக மாற்றிவிடாதீர்கள்... #சாதியவாதிகளே என்று கேட்டுக் கொண்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    கலையப்படாத சந்தையூர் சுவர்

    கலையப்படாத சந்தையூர் சுவர் ..!! அதிகாரவர்க்கமும் வெறியர்களோடு கூட்டு சேர்ந்து வேடிக்கை பார்க்கும் அவலம்..!! சுயமரியாதை இல்லாத இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாற உள்ள மக்கள்..!! என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இவர்.

    மறுக்க முடியாத சாதிய சிந்தனை

    சந்தையூர் சுவர் எந்த சுவராகவோ இருக்கட்டும். பெரிய அளவிலான சிக்கல் எழுந்தபின்பும், நீதி மன்றமே இடிக்கப்பட வேண்டுமென தீர்ப்பளித்த பின்பும் பிடிவாதம் காட்டுவது என்பதன் பின்னனியில் சாதிய ஆதிக்க சிந்தனை இல்லையென மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்று இவர் ட்வீட்டியுள்ளார்.

    English summary
    Netizens worried about sensitivity increasing in Santhaiyur, who has to take actio and what will be the solution were some of the valuable tweets.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X