ஆளுமைக்கே பாடம் சொல்லி தந்த ஒரு சரித்திரம் கண்டிராத சிங்கநிகர் தலைவி.. தங்கத் தாரகை அம்மா! #Amma
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மக்கள் தங்களின் மக்கள் தங்களின் இழப்பை பகிர்ந்து வருகின்றனர்.
|
சிங்கநிகர் தலைவி
ஆளுமைக்கே பாடம் சொல்லித் தந்த,
ஒரு சரித்திரம் கண்டிராத சிங்கநிகர் தலைவி,
தங்கத் தாரகை அம்மா..
|
தெய்வம் எல்லாம் சும்மா
எங்கே சென்றாய் எங்கள் தாயே கண் உறக்க பாராம கடைசியா மக்களுக்காக வாழ்ந்த அம்மா உன்தியாகத்துக்கு முன்னால் தெய்வம் எல்லாம் சும்மா என் தாயிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி
|
தீர்வு காண இயலாத மரணம்...
இன்று உங்கள் நினைவு தினம்
பல சூழ்சிகள் நிறைந்த
இன்று வரை தீர்வு
காண இயலாத உங்கள்
மரணம்...
இவ்வொரு வருட இடைவெளியில்
"தமிழ்நாடு" படும் அல்லல்களை உங்கள் ஆன்மா கண்டு கொண்டு தான் இருக்கும் "அம்மா"...
உங்கள் ஆட்சி காலத்தில் பல நல்திட்டங்களை பெற்ற மாணவன்...
|
சிங்க திமிர்..
சிம்ம குரல்..
சிங்க திமிர்..
ஆண் எனும் திமிரை அடக்கிய ஆனை ..
சிரித்தவன் கூட திருவாய் மலர்ந்தான்
உன் பிணத்தின் முன்னே அம்மா என்று ..
புதிர்களின் பூமித்தாயோ ..
மதியினால் தமிழ் மண் ஆண்டவளே....
|
கடைசி மூச்சு நிக்கிறப்பவும்..
கஷ்டப்பட்ட காலத்திலும்
கலகலனு நீ சிரிச்ச..
கடைசி மூச்சு நிக்கிறப்பவும்
எங்களதான் நீ நெனைச்ச..
கலங்கிடுவோம் நாங்கதான்னு
சாவ கூட நீ மறைச்சே..
அம்மா இல்லாடா இனி நான்
கடவுள் கிட்டேன்னு
சொல்லாம தா மறைஞ்ச.. டிசம்பர் 5 எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பை தமிழகம் கண்ட நாள்
|
தெய்வம்..மிஸ் யு அம்மா..
அம்மா..என்றும் எங்கள் இதயத்தில் குடி கொண்டிருக்கும் தெய்வம்..மிஸ் யு அம்மா..
|
மக்களுக்காகவே நான்..
மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்..
இறந்தும் இறவாப் புகழ் பெற்று
இறைவனை ஆளும்
ஜெ ஜெயலலலிதா எனும் நான்
என்ற மந்திரம்












Click it and Unblock the Notifications