“ஞாயிற்றுக்கிழமை காலையில உப்புமாவா... நோ”.. மீம்ஸ்களில் கதறும் நெட்டிசன்கள்!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமைக்கென ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அடுத்த ஒரு வாரத்திற்கு பேட்டரியை, (அதாங்க நம்மை..) சார்ஜ் செய்து வைத்துக் கொள்வதற்கு, இன்று விதவிதமாக சாப்பிட்டே ஆக வேண்டும் என நினைப்பார்கள் நம் மக்கள். அதனால்தான் மற்ற நாட்களில் வேலைக்காக வேகவேகமாக காலையில் எழுந்தவர்கள், இன்று கறிக்கடைக்காக எழுந்திருக்கிறார்கள்.
காலையிலேயே கறிக்கடை வாசல்களில் நிற்பவர்களின் பின்னணியில், நேரம் கழித்து சென்றால் நல்ல கறி கிடைக்காது, காலையில் இட்லிக்கு கறிக்குழம்பு கிடைக்காது என இப்படி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. என்னதான் இப்படி எல்லாம் ஞாயிறு அசைவம் சாப்பிடுவதற்கான நாள் என மக்கள் எதிர்பார்ப்போடு இருந்தாலும், சில வீடுகளில் வழக்கம்போல் இன்று காலையில் உப்புமா, மதியம் சாம்பார் என சொதப்பி விடுவார்கள்.
அப்படி காலையில் உப்புமா சாப்பிட்டவர்கள்தான் சமூகவலைதளங்களில், 'ஞாயிறு காலையில் உப்புமாவா... நோ...' என்றும், கூடவே, 'காலையில் உப்புமா.. மதியம் கறியா? இல்லை காய்கறியா? என தெரியவில்லையே' எனவும் மீம்ஸ்களில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications