கல்யாண பொண்ணெல்லாம் பத்திரமாத்தான் இருக்கு.. 40 கிலோ தக்காளியை காணோமாம்.. அதான் போலீஸ் வந்திருக்கு!
சென்னை: தக்காளி விலை உயர்வால், தக்காளி இல்லாமல் எப்படிக் குழம்பு வைப்பது என குழம்பிப் போயுள்ளதாக நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு வருடம் கோடை வெயில், கனமழை என மக்களை வாட்டி எடுக்கும் இயற்கையைப் போலவே, தக்காளி, வெங்காய விலையும் ஏதாவது வரலாற்று சம்பவங்களை செய்து விடுகிறது. சர்ரென விலை ஏறிப் போவதால், திண்டாடிப் போகும் மக்கள், தக்காளி, வெங்காயம் இல்லாமல் எல்லாம் எப்படி சமையல் செய்வது எனத் தவித்துப் போகின்றனர்.
அரசு என்னதான் நடவடிக்கை எடுத்து தக்காளி விலையைக் குறைக்கப் பார்த்தாலும், இது போன்ற சமயங்களில் சிறுசிறு கடைகளில் தக்காளி விலை எகிறித்தான் கிடக்கிறது. தென்னிந்திய சமையலுக்கு முக்கியமான பொருள் என்பதால், இந்த தக்காளி விலை உயர்வு மக்கள் மத்தியில் பேசு பொருளாகி விடுகிறது.
பிறகென்ன தக்காளியை வைத்து மீம்ஸ் போடுவதற்கு இது ஒன்று போதாதா.. மார்க்கெட்டில் எப்படி ராஜாவாக தக்காளி வலம் வருகிறதோ, அதேபோல் சமூகவலைதளப் பக்கங்களிலும் கடந்த சில நாட்களாக மீம்ஸ்களின் ஹீரோ நம்ம தக்காளிதான்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தக்காளி மீம்ஸ்கள் உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications