திடீரென டிரெண்ட்டான டிஎன்பிஎஸ்சி...ஏமாற்றத்தில் தேர்வர்கள்.. தெறிக்கவிட்ட புதிய மீம்ஸ்கள்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி கடந்த இரண்டு வருடங்களாக அரசு தேர்வுகளை எழுதி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளிவராதது மற்றும் பணியாணை வழங்கப்படாததால் பரிதவித்து வருகிறார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பாக மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு துறை வாரியாக ஆட்களை தேர்வு செய்கிறது. பணி நிரந்தரம், நல்ல சம்பளம் போன்ற காரணங்களால் அரசு பணியில் சேர பல லட்சம் இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களை தேர்வு செய்வதில் சுணக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2 ஏ தேர்வு என எந்த தேர்வாக இருந்தாலும் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகியவற்றில் வரும் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது.
இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், முடிவு வெளியிடப்படாமலேயே இருக்கிறது.
இதனிடையே தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த இளைஞர்கள் வேலையினை ராஜினாமா செய்துவிட்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து மாதக் கணக்கில் போட்டித் தேர்விற்கான பயிற்சியை மேற்கொண்டு தேர்வை எழுதி எப்போது தான் தேர்வு முடிவு வெளியாகும் என்ற ஏக்கத்தில் காத்துக்கிடக்கிறார்கள்.
2021 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்ற குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை . இதேபோல் குரூப் 2 பிரதான போட்டித் தேர்வுக்கான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் அரசு பணிக்கு தயாராகி வந்த பலர், வேலையில் சேர முடியாமல் தவிக்கிறார்கள்.
இதனிடேய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் பேட்டி அளித்த போது, தேர்வு எழுதியவர்களின் மதிப்பீட்டு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும். டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் முதல்-அமைச்சரால் வழங்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல், டிசம்பர் மாதம் ஆரம்பித்து 2-வது வாரத்திலும் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியாகவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதுபற்றி பதில் அளிக்கையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவு விரைவில் வெளியாகும்' என்று கூறினார். மேலும், தேர்வு முடிவு தாமதத்துக்கான காரணத்தை டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்கும் என்று கூயிருக்கிறார்.
இதனால் நொந்துபோன டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள், குரூப் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். #WeWantGroup2Results என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்ட் செய்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக காத்திருக்கும் தங்களுக்கு காலி இடங்களின் எண்ணிக்கைகளை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஒன்றரை லட்சம் பேப்பர்களை திருத்தும் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் 75 நாட்களில் வருகிறது. ஒரு லட்சம் பேப்பர்களை திருத்தும் டிஎன்பிஎஸ்சி முடிகள் 270 நாட்களை கடந்து வரவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.
நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய G4 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று வரை வெளியாகவில்லை?.. 10 மாதங்கள் ஆகியும் G2/2A முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை?.. ஆழ்ந்த உறக்கத்தில் டிஎன்பிஎஸ்சி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
பல நாட்களாக வருடங்களாக கடுமையாக படித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவுகளோடு TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றுகோரிக்கை வைத்துள்ளனர். உறங்கிக் கொண்டிருக்கும் தேர்வாணையமே(#TNPSC)?,வேலையில்லாது வறுமையில் உழன்றுகொண்டிருக்கும் தேர்வரை, காலம் தாழ்த்தி ஏமாற்றாமல், குரூப்-2 தேர்வு முடிவை விரைந்து வெளியிடுங்கள் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.



-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications