அம்பானி வீட்டில் நடக்குறது ப்ரீ வெட்டிங் தானாம்! இன்னும் கல்யாணமே நடக்கலையாம் வர்மா.. டிரெண்டான மீம்
சென்னை: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீட்டில் நடக்கும் திருமணம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மகள் இஷாவை திருமணம் செய்து கொடுத்தார். இந்தியாவே கண்டிராத மிக விலையுயர்ந்த திருமணத்தை அவர் நடத்தி பலரையும் வியக்க வைத்தார்.

கிட்டத்தட்ட $100m (£80m) அதாவது 830 கோடி ரூபாய் செலவு செய்து அந்த திருமணத்தை நடத்தினார். இப்போது அதே முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்.
திருமணம்: இந்தியாவின் கலாச்சாரப்படி திருமணம் என்பது வெறும் திருமணமல்ல. அது ஒரு வகையில் பொருளாதாரத்தை வெளிப்படுத்தும் பண்டிகை. பலரும் எங்களிடம் எவ்வளவு காசு இருக்கிறது என்று காட்டுவதற்காக கூட திருமணங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
மிகப் பெரிய செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்த நபர்களைக் கூட திகைக்க வைக்கும் வகையில் இந்தியாவில் திருமணங்கள் பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். அந்த வகையில் உலகமே வியக்கும் விதமாக இந்தியா இன்னொரு பெரிய திருமணம் அம்பானி குடும்பத்தில் நடக்கிறது.

தற்போது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கான திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஜாம்நகரில் உள்ள ஜோக்வாட் கிராமத்தில் நடந்து வருகிறது. பிரம்மாண்ட விருந்துடன் இந்த விழா தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் குஜராத்தி பாரம்பரிய உணவை அங்கு உள்ள கிராம மக்களுக்கு வழங்கினர். சுமார் 51,000 உள்ளூர் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு பிரம்மாண்டமாக விழா கொண்டாடப்பட்டது.

இது போன்ற பல்வேறு விழாக்கள் அடுத்த சில நாட்களுக்கு தொடரும். ஆனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் பிப்ரவரி 28 முதல் 3 வரை ஜாம்நகரில் உள்ள அம்பானி எஸ்டேட்டில் 5 நாட்கள் நடந்தது . பாடகி ரிஹானா தொடங்கி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வரை உலகின் டாப் பணக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர். முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
ராதிகா மெர்ச்சன்ட், என்கோர் ஹெல்த்கேர் என்ற பெரிய இந்திய மருந்து நிறுவனத்தை நடத்தும் ஒரு பிரபலமான வணிகக் குடும்பத்தின் வாரிசு ஆவார். தற்போது அந்த நிறுவனத்தின் தலைவராக ராதிகா மெர்ச்சன்ட் இருக்கிறார் .

மீம்ஸ்; இதை வைத்துதான் தற்போது மீம்ஸ்கள் போடபப்ட்டு வருகின்றன. அதன்படி இது வெறும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள்தான். இன்னும் திருமணமே நடக்கவில்லை என்று பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ நாங்கள் அதிக ரூபாய்க்கு ஜியோவில் ரீசார்ஜ் செய்கிறோம்.. நீங்க கல்யாண செலவுக்கு பயன்படுத்திக்கோங்க என்றும் மீம்ஸ் போட்டுள்ளனர்.
1000 கோடி ரூபாய் செலவு: இந்த திருமணத்திற்காக மொத்தமாக 1000 கோடி ரூபாயை அம்பானி செலவு செய்கிறார். இது அவரின் சொத்து மதிப்பில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.
ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 112 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவர் ஆற்றல் முதல் ஜவுளி மற்றும் தொலைத்தொடர்பு வரை பல துறைகளில் கோலோச்சி வருகிறார். கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி சொத்து கொண்ட முகேஷ் அம்பானி தன் வீட்டு திருமணத்திற்கு வெறும் 1000 கோடிதான் செலவு செய்கிறார்.
அதாவது வெறும் 1 சதவிகிதம் மட்டுமே செலவு செய்துள்ளார். இது இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய எடுத்துக்காட்டாக மாறி உள்ளது.
ஏனென்றால் இந்தியாவில்தான் வீட்டில் கடந்த இருந்தாலும் மேலும் 10 - 15 லட்சம் கடன் வாங்கி திருமணம் செய்வது வழக்கம். பல மிடில் கிளாஸ்கள் கடனில் சிக்கவே இந்த ஆடம்பர திருமணங்கள்தான் காரணம். ஆனால் அம்பானி வீட்டு திருமணத்திலோ 10 லட்சம் கோடி இருந்தாலும் திருமணத்திற்கு வெறும் 1000 கோடிதான் செலவு செய்கிறார்.
1000 கோடி ரூபாய் அதிகமாக இருந்தாலும்.. அவர்கள் வீட்டு சொத்து மதிப்பிற்கு இது வெறும் 1 சதவிகிதம்தான். அந்த வகையில் திருமணத்திற்கு எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்கு அம்பானியே பெரிய எடுத்துக்காட்டாக மாறி உள்ளார்!












Click it and Unblock the Notifications