எதுவா இருந்தாலும் ஆர்சிபி கேப்டன் க்ருணால் பாண்டியாவை பேச சொல்லுங்க.. டிரெண்டான ஐபிஎல் ஏலம் மீம்ஸ்
சென்னை: 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடந்து வருகிறது. இதில் நடந்த சில சொதப்பல்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நேற்று பெங்களூர் அணி பெரிதாக ஏலம் கேட்கவே இல்லை.ஆர்சிபி அணி கடைசி வரை முக்கியமான வீரர்களை எடுக்கவில்லை. அந்த அணி கே எல் ராகுலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை கேட்கவில்லை. 14 கோடி ரூபாய்க்கு கிடைத்தும் கூட பெங்களூர் அணி அவரை எடுக்க போகவில்லை. அதேபோல் சாஹலை அந்த அணி எடுக்கவில்லை. இரண்டு முறை மட்டுமே அந்த அணி சாஹலை ஏலம் கேட்டது. அதன்பின் ஏலம் கேட்கவே இல்லை. இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இதோடு இல்லாமல் கடந்த சீசன்களில் அந்த அணிக்கு சிறப்பாக ஆடிய அதிக விக்கெட் டேக்கர் முகமது சிராஜை பெங்களூர் அணி மிஸ் செய்துள்ளது. இது போக பண்டை பெங்களூர் அணி எடுத்து இருக்கலாம். ஆனால் அவருக்காக போராடவில்லை. இது போக ஷ்ரேயஸ் ஐயரை எடுக்கவும் போராடவில்லை. அந்த அணியின் செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது. பவுலர்களிலும் பெங்களூர் பெரிதாக யாரையும் எடுக்கவில்லை. இதனால் பெங்களூர் அணி கோர் டீமை உருவாக்குவதிலேயே திணறி வந்தது.

இன்று புவனேஷ்வர் குமாரை அணியில் எடுத்துள்ளனர். இவரை எடுக்க மற்ற அணிகள் தீவிரமாக போட்டியிட்டன . அப்போதெல்லாம் பெங்களூர் அணி ஏலம் கேட்கவே இல்லை. 10.50 கோடி ரூபாய் இருந்த போதுதான் அவரை எடுக்க ஏலம் கேட்டன. அப்போது பெங்களூர் அணி அவரை 10.75 கோடி ரூபாய்க்கு கேட்டு ஏலம் எடுத்தது.
இதன் மூலம் பெங்களூர் அணியின் பவுலிங் கொஞ்சம் பலமாகி உள்ளது. ஏற்கனவே குருனால் பாண்டியா அணியில் எடுக்கப்பட்டு உள்ளார்.

- ஹேசல்வுட்
- புவி
- யாஷ் தயாள்
- ரசிக் சலாம்
- க்ருணால் பாண்டியா
- சுயாஷ் சர்மா என்று பெங்களூர் அணியில் முக்கியமான பவுலர்கள் எடுக்கப்பட்டு உள்ளனர். இதை வைத்து பெங்களூர் அணியை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக சில வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. எதிர்பார்க்காத விதமாக முக்கியமான சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது தோனி படை. சிஎஸ்கே எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுத்துள்ளது. ராகுல் திரிபாதியை எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்றது. அவரை மிஸ் செய்ய கூடாது என்பதில் சிஎஸ்கே தீவிரமாக இருந்தது.

இவரை எடுக்க கொல்கத்தா அணியும் தீவிரமாக முயன்றது. இதில் ஒருவழியாக 3.20 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அவரை எடுத்தது. இவர் மிடில் ஆர்டர் ஓப்பனிங் இரண்டும் ஆட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அணியில் மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது.
அதேபோல் கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார். இதேபோல் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். சிஎஸ்கே அணி எந்த விதமான பதற்றமும் இல்லாமல்.. எளிதாக சாம் கரணை அணியில் எடுத்துள்ளது. கடந்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடாமல் போன அவர்.. இந்த சீசனில் மீண்டும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு ஃபாரீன் ஆல் ரவுண்டர் தேவை இருந்தது. அதை மனதில் வைத்தே இன்று ஏலத்தில் கவனமாக இருந்தது. இதன் காரணமாகவே இன்று டு பிளசிஸ் வந்த போது சிஎஸ்கே கேட்கவில்லை. அதேபோல் வாஷிங்டன் சுந்தர் வந்த போதும் சிஎஸ்கே கேட்கவில்லை. முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அன்ஷுல் கம்போஜ் சிஎஸ்கே அணியால் 3.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.

இப்படி இருக்க மிடில் ஆர்டரை வலிமையாக்கும் விதமாக தீபக் ஹூடாவை சிஎஸ்கே எடுத்துள்ளது.1.70 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே இவரை எடுத்துள்ளது. ஹைதராபாத் அணியுடன் மோதி சிஎஸ்கே அணி இவரை எடுத்து உள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் வலிமை அடைந்து உள்ளது.













Click it and Unblock the Notifications