இந்த ஒரு மீமை பாருங்க போதும்.. 2024-25 மத்திய பட்ஜெட்டை ஈஸியா புரிஞ்சிக்கலாம்.. டிரெண்டான மீம்
சென்னை: 2024 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, தெலுங்கானா, டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படவில்லை. ரயில்வே துறைக்கும் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் பாதி பட்ஜெட் ஆகும். இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டதால்.. முழு பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான முக்கியமான ஒரு அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மெட்ரோ நிதி ஒதுக்கீடு, விரைவு சாலைகள், வெள்ள நிவாரணம் என்று எதுவும் வழங்கப்படவில்லை.

நிதி இல்லை: ஏற்கனவே சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது, நிதியை விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி இல்லாமலே வெறும் மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காமல் கைவிரித்து வரும் நிலையில் கூடுதல் நிதிகளை பல்வேறு சர்வதேச வங்கிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இவர்களின் உதவியுடன்தான் தமிழ்நாடு அரசு மெட்ரோ சேவை கட்டுமானங்ளை மத்திய அரசின் உதவி இல்லாமலே மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் விரைவு சாலைகளுக்கும் நிதி அளிக்கப்படவில்லை. விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும். 2024 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான புதிய எக்ஸ்பிரஸ் வே சாலைகள் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று எதுவும் வெளியாகவில்லை.
மீம்ஸ்; 2024 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, தெலுங்கானா, டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படவில்லை. ரயில்வே துறைக்கும் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

பீகார், ஆந்திர பிரதேச அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்திய பாஜக அரசு பணிந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் இரண்டு மாநிலங்களுக்கும் முக்கியமான பல திட்டங்களை பாஜக அரசு வெளியிட்டு உள்ளது. இது மத்திய பட்ஜெட்டா.. பீகார், ஆந்திர பிரதேசத்தின் மாநில பட்ஜெட்டா என்று கேட்கும் அளவிற்கு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகாருக்கு இதேபோல் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் என்று இரண்டு மாநிலங்களுக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
முக்கிய அறிவிப்புகள்; இதேபோல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கப்படும்.

அரசின் முன்னெடுப்பால் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கான பிரதமரின் 5 அம்சத் திட்ட அமலாக்கத்துக்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications