என்னடா.. தக்காளி சாதம் கேட்டா சிக்கன் பிரியாணி கொடுக்குறீங்க! தாறுமாறான மீம்ஸ்களின் தொகுப்பு
சென்னை: சென்னையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாய் இல் 150 ஆக உயர்ந்து விற்பனையாகிறது. மும்பையில் அதிகபட்சமாக 160 ரூபாய் ஆக உள்ளது.தக்காளி விலை அதிகரிப்பது தொடர்பாக மீம்ஸ்கள் அதிக அளவு பரவி வருகின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.
பாகுபலி படத்தில் வரும் ஒரு வசனம் தக்காளிக்கு நிச்சயம் பொருந்தும். உயிரோடு இருக்கும் வரை எங்கிருந்தாலும் அவன் அரசன் தான். ஆம் சமையலின் அரசன் என்றால் அவன் தக்காளி தான்.

தமிழ்நாட்டில் தக்காளி விலையும் பூமிகளிலேயே தக்காளி விலை தாறுமாறாக உள்ளது. தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது கடினம், எந்த குழம்பு வைப்பதாக இருந்தாலும் தக்காளி கண்டிப்பாக வேண்டும். பிரியாணி சமைப்பதில் தக்காளி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சைவம், அசைவம் என எந்த சமையலிலும் அரசன் என்றால் அது தக்காளி தான்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு தக்காளியின் விலை மிக குறைவாக இருந்தது. அதனால் விவசாயிகள் பலர் தக்காளியை பறிக்காமல் அப்படியே அழுதபடியே உழுதுவிட்டனர். தக்காளியே இனி பயிரக்கூடாது என்கிற மனநிலைக்கு வந்தார்கள். தக்காளி பயிரட வெயில் அவசியம். அதனால் கோடை காலத்தில் தக்காளி நன்றாக வந்தது. ஆனால் ஜூன் மாதத்திற்கு பிறகு மழையும், வெயிலும் மாறி மாறி வந்தது. குறிப்பாக சிதோஷண நிலையே மாறிப்போனது.
ஒரு பக்கம் தக்காளி பயிரிட்டவர்கள் குறைவு என்கிற நிலையில், தக்காளியை பயிரிட்ட ஒருசிலருக்கும் பெரிய அளவில் விளைச்சல் இல்லை. இதன் தாக்கம் கடந்த மாத இறுதியிலேயே தெரிய தொடங்கியது. தக்காளி விலை ஏறப்போகிறது என்பது நன்றாகவே தெரிந்தது. தற்போது தக்காளி விலை உச்சத்தை அடைந்துள்ளது.
தக்காளி லாரிகள் சென்னைக்கு வருவது பெரிய அளவில் குறைந்துள்ளது.அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடாகாவிற்கே விளையும் தக்காளி போதாத நிலை காணப்படுகிறது. இதனால் தக்காளி வருகை அதிரடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலைஒரு கிலோ 150 என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது.
தக்காளி விலை சென்னையில் இப்படி என்றால், தக்காளி விலையும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பெரிய அளவில் குறைந்துள்ளது.. அங்கும் தக்காளி விலை 130 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. தக்காளி விலையை விட ஆப்பிள் பலஇடங்களில் குறைவாக உள்ளது. ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளிஇன்று பணக்காரர்களின் ஆப்பிளை விட உயர்ந்துள்ளது,
தமிழக அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.ஆனால் மிக குறைவான அளவிலேயே விற்கப்படுவதால் மக்களுக்கு போதவில்லை. இது ஒருபுறம் எனில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு விலையும் அதிகரித்துள்ளது. இது ஒரு புறம் எனில் சீரகம், துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு என மளிகை பொருட்கள் விலையும் தாருமாறாக உயர்ந்துள்ளது.மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இப்படியான சூழலில் தக்காளி விலை உயர்வை சுட்டிக்காட்டி பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகி உள்ளன. அவற்றின் தொகுப்பை இப்போது பார்ப்போம். ஒருவர் கடையில் தக்காளி சாதம் கேட்டுள்ளார். அதற்கு சிக்கன் பிரியாணி கொடுத்துள்ளார்கள்.அவர் நான் தக்காளி சாதம் கேட்டால் சிக்கன் பிரியாணி தருகிறீர்கள் என்று கேட்கிறார்.. அதற்கு அவர் நீ கொடுத்த காசுக்கு சிக்கன் பிரியாணி கொடுக்காம தக்காளி சாதமா கொடுக்க முடியும் என்று கேட்பார். விவேக் காமெடியை உள்டா செய்து இந்த மீம் போட்டுள்ளார்கள். இப்படி வெளியாகி உள்ள பல்வேறு மீம்ஸ்களை நீங்களே பாருங்கள்.







-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications