ரோஜா செய்த காரியம் இருக்கே.. சூப்பர்.. இதுக்கெல்லாம் தயங்கினா எப்படி.. ஆச்சரியமான பணியாளர்கள்!
தூய்மை பணியாளர்களின் அச்சத்தை நடிகை ரோஜா போக்கினார்
ஹைதராபாத்: எல்லாருமே பயந்து கொண்டு தயங்கி நின்றனர்.. கிருமிநாசினியை தெளிக்க அச்சத்தால் பின் வாங்கினர்.. ஆனால் தைரியமாக முன்னே சென்று கிருமிநாசினி மெஷினை எடுத்து தெளிக்க ஆரம்பித்துவிட்டார் எம்எல்ஏ ரோஜா.. அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் ரோஜாவின் இந்த துணிச்சலை கண்டு அவருடன் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் வேலையில் இறங்கினர்!
கொரோனவைரஸ் பயங்கரமான தொற்றாக உள்ளது.. இதன் அறிகுறிகள் சாதாரணமாக நமக்கு வரக்கூடிய ஒன்றாக உள்ளதால், இந்த பயம் அதிகமாக பீடித்து வருகிறது.
இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியாதது மேலும் பயத்தை கூட்டி வருகிறது. அதனால் தொற்று ஏற்படாமல் காத்து கொள்வதே இப்போதைக்கு சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

நகரி தொகுதி
இந்த தொற்றை பொருட்படுத்தாமல், தங்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் எத்தனையோ டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மை பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் நகரி தொகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் புல்லரிக்க வைத்துள்ளது.. இதற்கு காரணம் எம்எல்ஏ ரோஜா செய்த காரியம்தான்.. தூய்மை பணியாளர்கள் பலர் முன்வந்து தங்கள் பணியை செய்து வந்தாலும் ஒருசிலருக்கு தொற்று பயம் இருக்கவே செய்கிறது.

கிருமிநாசினி
அப்படிதான் நகரி தொகுதியில் உள்ள சில தூய்மை பணியாளர்களுக்கு பயம் வந்துள்ளது. இவ்வளவுதான் அவர்களும் வீதியில் இறங்கிதான் வேலை பார்த்து வந்தனர்.. திடீரென நகரி தொகுதியில் உள்ள வடமாலை பகுதியில் ஒருவருக்கு வைரஸ் உறுதி ஆகியிருக்கிறது.. அதனால் குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு மட்டும் கூடுதலாக கிருமிநாசினியை தெளிக்க நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

துணிச்சல்
ஆனால் தூய்மை பணியாளர்களோ பயந்தனர்.. தயங்கியபடியே நின்றனர்!! இந்த சமயத்தில் எம்எல்ஏ ரோஜா அந்த கிராமத்தில் நேரடி ஆய்வுக்கு சென்றிருந்தார்.. பணியாளர்கள் தயக்கம் காட்டுவதை புரிந்து கொண்டார்.. பிறகு தானே அங்கிருந்த கிருமிநாசினி மிஷினை கையில் எடுத்து தெளிக்க ஆரம்பித்துவிட்டார்.. எம்எல்ஏ-வே இப்படி துணிச்சலான காரியத்தில் இறங்கியதை பார்த்த பணியாளர்கள் உடனே வந்து அவர்களும் கிருமிநாசினி தெளித்தனர்.

கர்ப்பிணி பெண்
ரோஜாவின் இச்செயலில் இணைந்து, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினியை தெளித்து முடித்தனர். எம்எல்ஏவே முன்மாதிரியாக இருந்து அசத்திய இந்த சம்பவம் பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு கூட , ஆம்புலன்ஸ் இல்லாமல் ஆஸ்பத்திரியில் ஒரு கர்ப்பிணி தவித்தபோது, ரோஜா தன்னுடைய சொந்த காரில் அப்பெண்ணை வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு அனுப்பி வைத்து பாராட்டை அள்ளியதும் குறிப்பிடத்தக்கது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications