சிரிச்சே விரட்டுங்க அழுகையை!
எதற்கெடுத்தாலும் சிலர் அழுவார்கள்.. அது அவர்களை தொடர்ந்து பலவீனப்படுத்திக் கொண்டே இருக்கும். மாறாக சிரித்துப் பாருங்களேன்.. சிரிக்கச் சிரிக்க உங்களது பலம் கூடிக் கொண்டே போகும். நீங்கள் முன்பு செய்து வந்த தவறுகள் கூட சரியாகி விடும்.. அந்த மாற்றத்தை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்.
அழுவதால் எந்த பயனும் இல்லை. உடலும் உள்ளமும் மேன்மேலும் சோர்ந்து தான் போகும். ஆனால் சிரிப்பதால் மனதில் உள்ள கவலைகள் நீங்கி உடலும் மனதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். சிரிப்பதால் மனிதனுடைய ஆயுள் அதிகமாகிறது. மனதில் எப்போதும் கவலைகளுக்கு இடமளிக்காதீர்கள் ஏனென்றால் உங்கள் மனது ஒன்றும் கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டி கிடையாது. உங்கள் மனதை அன்று பூத்த மலரைப் போல புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

சிரித்து வாழ வேண்டும் அந்த சிரிப்பு உங்கள் இலக்கை அடைவதற்கான ஒரு உத்வேகத்தை உங்களுக்கு அளிக்கும். மனதில் மகிழ்ச்சி இருப்பவரிடம் முகத்தில் சிரிப்பு இருக்கும். உங்கள் முகத்தில் தோன்றும் சிரிப்பு உங்களை மட்டும் அல் உங்களைச் சுற்றி இருப்பவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். உங்களுடைய மகிழ்ச்சியை சிரிப்பினால் வெளிப்படுத்துங்கள். அழுது அழுது எதுவும் நடக்கப் போவதில்லை. உங்கள் இலக்கை நீங்கள் வெற்றிகரமாக அடைய வேண்டுமென்றால் அழுவதை விட்டு விட்டு தோல்வியைக் கண்டு சிரியுங்கள்.
வாழ்வில் கவலைகள் ஏற்படும் போது உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து சிரியுங்கள். ஒரு நாளைக்கு குறைந்து பத்து நிமிடமாவது சிரிப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. உங்கள் சிரிப்பினிலே உங்கள் அழகு வெளிப்படும். சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications