For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செய்யாமல் விட்டுட்டோமே.. வாய்ப்புகளை விட்டுட்டு வருந்தாதீங்க மக்களே!

Google Oneindia Tamil News

சென்னை: அடடா அதை செய்யாமல் விட்டு விட்டேனே என்று நிறையப் பேர் வருத்தப்படுவார்கள். அப்படி செய்வதை முதலில் நிறுத்துங்கள். செய்யத் தவறியதற்காக வருத்தப்படுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. காரணம், அது நீங்கள் தெரியாமல் செய்யத் தவறியது.

நீங்கள் உண்மையில் எதற்கு வருத்தப்பட வேண்டும் தெரியுமா.. செய்யும் சூழல் இருந்தும், நல்ல வாய்ப்பு கிடைத்தும் கூட ஒரு விஷயத்தை செய்யத் தவறுகிறீர்கள் பாருங்க.. அதற்குத்தான் உண்மையிலேயே வருத்தப்பட வேண்டும்.

ஆனால் அதையும் கூட தவிர்க்கலாம்.. காரணம் வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது சொல்லுங்க..ஸோ எந்த செயலையும் உரிய காலத்தில் செய்தால் பின்னாடி வருத்தப்பட நேரிடாது. அழுது புலம்புவதால் எதுவும் ஆகாது. எனவே செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருந்தாமல் ஆகப் போவதைப் பற்றி மட்டும் கவலைப்படுங்க.

வசந்திகள் இருந்தும்

வசந்திகள் இருந்தும்

இன்றைக்கு பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்காக நிறைய வசதிகள் செய்துக் கொடுக்கின்றனர். ஆனால் மாணவர்கள் ஆசிரியர் நடத்தும் போது கவனிக்காமல் இருக்கின்றனர். இதனால் தேர்வில் மதிப்பெண் குறைகிறது. சில மாணவர்கள் வருடம் முழுவதும் படிக்காமல் நேரத்தை விரயம் செய்து விட்டு கடைசி இரண்டு மாதம் இருக்கும் போது அவசரமாகப் பாடங்களைப் படிப்பர். அப்போ வரும் பாருங்க ஒரு பயம். தேர்வுக்குள் பாடங்களைப் படித்து தேர்ச்சிப் பெற்று விடுவோமா என்று. அந்த பயத்தில் சிரமப்பட்டுப் படித்துத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடையும் போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ராமு சோமு தாமு

ராமு சோமு தாமு

ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தனர். ராமு சோமு தாமு மூவரும் சிறு வயதிலேயே நண்பர்கள். மூவரும் ஒன்றாகப் படித்தனர். ராமு நன்றாகப் படிப்பான். அவன் நன்றாகப் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான். சோமு பொறியியல் படித்தான். தாமுவுக்குப் படிப்பு சுமாராக வரும். அவன் கலைக்கல்லூரியில் பொருளாதாரம் படித்து வந்தான். மூவரும் படிப்பின் காரணமாக வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றாலும் வருடத்திற்கு ஒரு முறை அந்த ஊரில் சந்தித்துக் கொள்வர்.

இது ராமுவின் கதை

இது ராமுவின் கதை

அவ்வாறு சந்திக்கும் போது ராமு தனக்கு அரசாங்கத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறினான். தாமுவும் சோமுவும் ராமுவை நினைத்து ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு புறம் பொறாமைத் தீ இருவரையும் ஆட்கொண்டது. தாமு தானும் நன்றாகப் படித்திருந்தால் நாமும் பெரிய அரசாங்க அதிகாரியாக இருந்திருக்கலாமே எனத் தோன்றியது. அடடா இப்படி படிக்காமல் இருந்து விட்டேனே என வருந்தினான்.

 சோமுவுக்கு வேலை இல்லை

சோமுவுக்கு வேலை இல்லை

சோமுவுக்கு எங்கும் வேலைக் கிடைக்கவில்லை. அவனுக்கு எலக்ட்ரிகல் சம்பந்தமான வேலைகள் நன்குத் தெரியும். அதனால் தானே சொந்தமாக ஒரு கடையைத் தொடங்கினான். வேலை போக மற்ற நேரத்தில் வங்கிப் பணிகளுக்கான தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அடுத்த வருடம் மூவரும் சந்திக்கும் போது ராமு அரசாங்க அதிகாரியாகவும் சோமு தன் விடாமுமற்சியால் தொழில் முனைவரகவும் இருந்தனர். ஆனால் தாமு இவர்களின் வெற்றிகளை நினைத்து வருந்தியவன் அவனை மேம்படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்கிக்கவில்லை.

விழாமல் வாழ்வதே சரி

விழாமல் வாழ்வதே சரி

போனது போகட்டும் நம் வாழ்க்கையில். வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று வீழ்ந்ததற்காக வருத்தப்படாமல் மீண்டும் வீழாமல் வாழ்வதே சரி. நம் வாழ்வின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முயற்சி செய்துக் கொண்டே இருக்கும். இறந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுங்க பாஸ். அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கை ஹாப்பியா இருக்கும்.

English summary
Time will never wait for us, we have to go with the time always.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X