எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல.. எப்படி வாழ்கிறோம்!
நிறையப் பேருக்கு வாழ்க்கையின் தத்துவமே சரியாக புரிவதில்லை. எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல.. 100 வயது வரை வாழ்வது நிறைவான வாழ்க்கையா என்றால் நிச்சயம் இல்லை.. ஆனால் அந்த 100 ஆண்டுகளை எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.
நாம் வாழ்ந்த வாழ்க்கையில் எத்தனை பேருக்கு உறுதுணையாக இருந்தோம்.. எத்தனை பேருக்கு ஊன்று கோலாக இருந்தோம்.. எத்தனை பேருக்கு பாசிட்டிவ் எனர்ஜியாக இருந்தோம்.. எத்தனை பேருக்கு ஊக்க சக்தியாக இருந்தோம்.. இதுதான் முக்கியம்.. நீங்கள் வாழ்ந்தீர்கள் என்பதை விட உங்களால் எத்தனை பேர் வாழ்ந்தார்கள் என்பதே அந்த அழகான வாழ்க்கைக்கு நல்லதொரு சான்றாக அமைய முடியும்.

உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்பதற்கேற்ப நாம் செய்யும் உதவி நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும். நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். நம்முடைய வாழ்வு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்ங வேண்டும். ஏழை மக்களின் நெஞ்சில் இன்றும் எம்.ஜி.ஆர் கால ஆட்சி மனதில் பதிந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவர் செய்த உதவிகளே.
இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காமல் அனைவருடனும் அன்பாகப் பழகியவர் காமராஜர் அவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வந்தார் அன்னை தெரசா அவர்கள். தள்ளாத வயதிலும் ஏழைகளின் பசியை ஒரு ரூபாய்க்கு இட்லி வைத்துப் போக்குகிறார் கமலாத்தாள் பாட்டி. முடிந்தவரை பிறருக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும்.
இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்தல் முதியோர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் மனதில் இடம்பெறலாம். கோடி கோடியாய் சொத்து வைத்தவன் பெயரெல்லாம் வரலாற்றிலில்லை தன் இன்னுயிர் போகும் நேரத்திலும் தன் புண்ணியங்கள் அனைத்தையும் தானமாகக் கொடுத்ததால் இன்றும் அவர் புகழ் வானளாவி நிற்கிறது.
எதைக் கொண்டு வந்தோம் நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம் இவ்வுலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை அதனால் கிடைத்த வாழ்வில் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் சிறந்த நண்பராகவும் உங்களால் முடிந்த உதவியை மற்றவருக்குச் செய்து நாமும் இன்புற்று பிறரையும் இன்பவெள்ளத்தில் ஆழ்த்தலாமே.












Click it and Unblock the Notifications