லொடலொடவென வாயாடாமல்.. மெளனமாக இருந்து பாருங்கள்.. உலகையே வெல்லலாம்
லொடலொடவென வாயாடாமல்.. மெளனமாக இருந்து பாருங்கள்.. உலகையே வெல்லலாம்
சிலர் வாயாடியாக இருப்பார்கள்.. சிலர் மெளனமாக இருந்து காரியம் சாதிப்பார்கள்.. இதில் யார் சிறந்தவர் என்று போட்டியெல்லாம் வைக்க முடியாது. காரணம், வாயாடியாக இருப்பவர்களில் பலர் திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்பதால்.
ஆனால் மெளனம் ஒரு அருமையான அகிம்சாயுதம். பல நேரங்களில் மெளனம்தான் தீர்வைக் கொடுக்க உதவும். எப்பவுமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. ஆனால் பல பிரச்சினைகளுக்கு அமைதிதான் சிறந்த மருந்தாக இருக்கும்.
எப்படின்னு கேட்கறீங்களா.. ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசி டென்ஷன் ஆகி அதுகுறித்து விவாதிக்கப் போய் அதை மேலும் சிக்கலில் கொண்டு போய் விட்டவர்களின் கதை இங்கு நிறையவே உள்ளது. அதேசமயம், சிலர் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாமல் அமைதி காத்து அழகாக யோசித்து அருமையாக முடித்து வைத்த கதையும் உண்டு.

ஆர்டர் கிடைத்த பொம்மை
ஒரு பொம்மை தொழிற்சாலைக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு ஆர்டர் வந்தது. பத்து நாட்களில் பத்து லட்சம் டெடி பொம்மைகள் வேண்டும் என்பது தான் அந்த ஆர்டர்.மதனும் மோகனும் அந்த கம்பெனியில் டீம்லீடராக இருந்தனர்.அதில் மோகன் மிகவும் அமைதியாக இருப்பான். இருவரையும் அழைத்து மேனேஜர் வந்திருக்கும் ஆர்டரைப் பற்றி விவரித்தார்.

வாய்ப்பே இல்லை
இதைக் கேட்ட மதன் பத்து நாட்களில் இதை முடிக்க வாய்ப்பே இல்லையென்றும் இந்த வேலையைச் செய்வது மிகவும் சிரமம் என்று தன் மேனேஜரிடம் கூறினான். மோகனோ அவர் கூறியதைக் கேட்டு அமைதியாக நின்றிருந்தான். அரை மணி நேரம் மதன் பேசியும் மேனேஜர் இந்த ஆர்டரை முடிக்க வேண்டும் வேறு வழியில்லை அவ்வாறு குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தால் இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆர்டர் வந்து கொண்டேயிருக்கும் என்றார்.உடனே மதன் சாரி சார் என்னால செய்ய முடியாது என்றான்.

ஏன் இந்த அமைதி
உடனே அவர் மோகனைப் பார்த்து என்ன மோகன் அமைதியாகவே இருக்கீங்க நீங்க என்ன சொல்றீங்க என்றார். உடனே மோகன் சார் நான் இந்த ஆர்டரை செய்து முடிக்கிறேன் என்று கூறினான். அதற்கு மதன் இதை நீ எப்படி முடிக்கிறாய் பார்க்கிறேன் என்று கூறி கோபத்துடன் வெளியே சென்றான். அந்த ஆர்டரின் தகவல்களை மேனேஜரிடம் வாங்கிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்தான் மோகன். முதலில் தன்னுடைய செயல் திட்டங்களை வகுத்தான். பின் தன் டீமில் வேலை செய்பவர்களை அழைத்து தன் திட்டத்தை விளக்கினான். அவன் தொழிலாளிகளை மூன்றாகப் பிரித்தான்.

ஷிப்ட் போட்டு நடந்த வேலை
மூன்று ஷிப்ட் வேலை நடந்தது. அப்போது மதன் தன் நண்பர்களிடம் இவன் தோற்கத்தான் போகிறான் என்றான். எட்டு நாட்களில் எட்டு லட்சம் பொம்மை தயாராகியிருந்தது.ஆனால் அந்த நிறுவனம் பத்தாம் நாள் காலையிலேயே டெலிவரி செய்ய சொல்லியது. வேறு வழியில்லாமல் எட்டாம் நாளும் ஒன்பதாவது நாளும் அவனுடைய டீமில் அனைவரும் இரவு பகல் பாராது உழைத்தனர். இறுதியில் அவன் பத்தாம் நாள் காலை பத்து லட்சம் ஆர்டரையும் முடித்து கொடுத்து விட்டான். அவனது செயலாற்றலைக் கண்டு மேனேஜர் அவனைப் பாராட்டினார்.

அமைதி நன்மை பயக்கும்
அமைதி பல இடங்களில் நன்மை பயக்கும். ஒரு பிரச்சினை வந்வுடன் அதைப் பற்றி வாயடிக்காமல் அதை அமைதியாக இருந்து எப்படி திறம்பட கையாள வேண்டும் என்பதே சிறந்தது. அமைதியாக இருப்பதில் எந்த நஷ்டமும் வந்து விடாது.. மாறாக நிறைய லாபங்கள்தான் உண்டு. பல இடங்களில் நாம் மௌனம் காத்தால் மட்டுமே நாம் வாழ்வில் உயர முடியும். அதனால் மௌனமாக இருந்து வாழ்வில் வெற்றியை வசமாக்குங்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications