நிறைய சிரிங்க.. கொஞ்சமா கவலைப்படுங்க.. !
வாழ்க்கையை எளிமையாகவும், சந்தோஷமாகவும் வச்சுக்க என்ன செய்யணும் தெரியமா.. கொஞ்சமா கவலைப்படணும்.. நிறைய சிரிக்கணும்.. யாரையும் ஜட்ஜ் செய்யக் கூடாது.. எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏத்துக்கங்க.
வெறுப்பைக் கைவிடுங்க.. நிறைய அன்பு செலுத்துங்க.. ஸ்டிரஸ்ஸை தூக்கிப் போடுங்க.. வாழ்க்கை இனிதாகவும்.. வாழ்வது சுகமாகும்.. அதை விட வேற என்னங்க சொர்க்கம் இருக்க முடியும்.. சொல்லுங்க!

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்கேற்ப கவலைகளை மறந்து மனம் குளிர தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது சிரிங்க. காலையில் இருந்த பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு நிச்சயமாக சிறிது நேரம் ரிலாக்ஸ் தேவை. பிடித்த நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்கள் துணையுடன் பேசி மகிழுங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் சிரிப்பே உங்கள் மனதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடும். மனதுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். உங்கள் பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூறுங்கள்.
சிரிப்பு ஒன்றே உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கி மனம் புத்துணர்வு பெறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நாம் சிரிக்கும் போது மனதிலுள்ள கவலைகள் டென்ஷன் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. குழந்தைகளின் சின்ன சின்ன சேட்டைகளைக் கண்டு சிரித்து மகிழுங்கள்.குழந்தையின் சிரிப்பில் தாயின் கவலைகள் எல்லாம் கரைந்து விடும்.
சின்ன சின்ன சந்தோசங்கள் தான் நம் வாழ்வை உயிரூட்டுபவை. அதனால் நீங்களும் சிரிங்க உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைங்க. கவலையைத் தூக்கி தூரப் போடுங்க. நிறைய சிரிச்சு உடம்பையும் மனசையும் இளமையாக வைத்துக் கொள்ளுங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications